கூகுளில் இடியட் என தேடினால் டிரம்ப் புகைப்படம் வருவது ஏன்? தமிழன் சுந்தர் பிச்சை
சீனாவின் தணிக்கை முறைகளுக்கு ஏற்ப சேவைகளை அளிப்பதில் கூகுள் நிறுவனம் சமரசம் செய்து கொள்கிறது என அமெரிக்க நாடாளுமன்ற விசாரணைக் குழுவில் புகார் அளிக்கப்பட்டது.
இதனால் அமெரிக்க நாடாளுமன்ற விசாரணைக்குழு முன்பு சுந்தர் பிச்சை ஆஜாரானார். அப்போது அவரிடம் கூகுள் தொடர்பாக சுமார் 3 மணி நேரம் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவர் எந்த ஒரு முகம் சுழிக்காமலும் பதிலளித்தார்.
இது அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது.

இந்நிலையில் ஜோய் லாவ்க்ரேன் என்பவர், கூகுளில் இடியட் என்று தேடினால் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் புகைப்படம் வருவது ஏன் என்று கேள்வி கேட்டார்.
அதற்கு சுந்தர் பிச்சை கூகுள் எதையும் உள்நோக்கத்துடன் செய்யவில்லை. குறிப்பிட்ட ஒரு வார்த்தையைத் தேடும்போது, கூகுள் பலகோடி இணையப்பக்கங்களை ஆய்வு செய்யும்.

அதில், டிரம்ப் பெயரை பெரும்பாலானோர் என்ன அர்த்தத்துடன் பயன்படுத்துகின்றனர் உள்ளிட்ட 200 விஷயங்களைக் கணக்கில் கொண்டுதான், முடிவுகளை கூகுள் வெளிப்படுத்தும். கூகுளின் அல்கரிதம் எப்படி வேலை செய்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.
கூகுளில் இடியட் என தேடினால் டிரம்ப் புகைப்படம் வருவது ஏன்? தமிழன் சுந்தர் பிச்சை
Reviewed by Author
on
December 14, 2018
Rating:
No comments:
Post a Comment