அண்மைய செய்திகள்

recent
-

முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை எளிதாக அகற்ற வேண்டுமா?


சூரிய ஒளி அதிகம் படுவதாலும், நம் உடலில் ஹார்மோன் குறைபாடு ஏற்பட்டாலும், சிகிச்சையின்போது பல மாத்திரைகளை எடுத்துக் கொள்வதன் மூலமாகவும், சரியான தூக்கம் இல்லாமலும், மன அழுத்தம் கொண்டிருந்தாலும் கண்டிப்பாக முகத்தில் கரும்புள்ளிகள் தோன்றுவது வழக்கம்.

ஒருமுறை இந்த கரும்புள்ளிகள் முகத்தில் தோன்றி விட்டால் நம் முக அழகை முற்றிலும் பாதிக்கும். இப்படி முகத்தில் தோன்றி அழகை பாதிக்கும் கரும்புள்ளிகளை எவ்வாறு அகற்றலாம் என்பதை பார்ப்போம்.
பால் - 1 டீஸ்பூன் ,
மஞ்சள் பொடி - 2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - தேவையான அளவு
இவை மூன்றையும் ஒன்றாக கலந்துகொண்டு முகத்தில் குறைந்தது 15 நிமிடம் ஃபேஸ் பேக் போடவும். வாரத்தில் 3 முறை இதுபோன்று செய்துவந்தாலே போதும் நல்ல முடிவு கிடைக்கும்.

  • கொஞ்சம் பப்பாளி சாறு, கொஞ்சம் எலுமிச்சை சாறு, தேன் கொஞ்சம் இவை மூன்றையும் ஒன்றாக சேர்த்து, நம் முகத்தில் தடவி செய்து சிறிது நேரம் அப்படியே விடவும். பின்னர் வெதுவெதுப்பான தண்ணீரை கொண்டு முகத்தை கழுவலாம். இவ்வாறு வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தாலே போதும் முகம் பளபளப்பாக காணப்படும்.
  • உருளைக்கிழங்கை சிறிய துண்டுகளாக நறுக்கி அதனை முகத்தில் கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி வர நல்ல பலன் கிடைக்கும்


முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை எளிதாக அகற்ற வேண்டுமா? Reviewed by Author on December 27, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.