அண்மைய செய்திகள்

  
-

இரத்தினராசா சிமித்கட்சன் அவர்கள் இழப்பு ஈடு செய்ய முடியாதது-ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி-(படம்)




ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினர் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த தோழர் சந்திரலீலா அவர்களின் அன்புக் கணவர் நேற்று திங்கட்கிழமை (24)   இயற்கை எய்திய செய்தி எம்மை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

-இவ்விடையம் தொடர்பில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி(ஈ.பி.ஆர்.எல்.எப்) கட்சியின் தலைவர்  சுரேஸ். க.பிரேமச்சந்திரன் மற்றும் கட்சியின் செயலாளர் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ந.சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் இணைந்து இன்று செவ்வாய்க்கிழமை(25) அனுதாபச் செய்தி ஒன்றை விடுத்துள்ளனர்.

-குறித்த அனுதாபச் செய்தியில் மேலும் குறிப்பிடுகையில்,,,

ஆணாதிக்க சமுதாயத்தில் தனது துணைவியார் தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலைக்காகப் பல்வேறு முனைகளில் போராடிக்கொண்டிருக்கையில் அவருக்குப் பக்க பலமாக இருந்து அவரை ஊக்கப்படுத்தியதுடன் தோள்கொடுக்கும் தோழனாகவும் தனது கடமையைச் செய்தவர் எமது தோழர்.இரத்தினராசா-சிமித்கட்சன் (கட்சன்).அவர்கள் இன்று எம்முடன் இல்லை என்பதை நினைக்கவே நெஞ்சம் விம்முகின்றது.

 குhணி மீட்புப் போராட்டம், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான போராட்டம், அரசியல் கைதிகளின் விடுதலைக்கான போராட்டம் உட்பட அனைத்து போராட்டங்களையும் தோழர் சந்திரலீலா முல்லைத்தீவில் தலைமை தாங்கி கட்டுக்கோப்புடன் முன்னெடுத்து வருகின்றார்.

அவருக்கு அனைத்து வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கி அவரை உற்சாகப்படுத்திய தோழரின் மறைவு எமக்குப் பேரிழப்பாகும்.

அன்னாரின் பிரிவு அவரது குடும்பத்திற்கு மட்டுமன்றி, ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட தமிழ்ச் சமூகத்திற்கும் பேரிழப்பாகும்.

தனது ஒப்பற்ற துணைவனையும் தோழனையும் இழந்து துயருற்றிருக்கும் எமது தோழர் சந்திரலீலாவிற்கும் அவரின் குடும்பத்தினருக்கும், அவரது உற்றார் உறவினருக்கும் நண்பர்களுக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

சமுதாயத்திற்காக உழைப்பவர்கள் தனித்து விடப்படுவதில்லை என்பதற்கேற்ப, தோழர் சந்திரலீலா அவர்கள் மனத்துணிவுடன் மக்கள் பணிகளை மேற்கொள்ள மக்கள் சக்தியுடன் கட்சியும் துணை நிற்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.என குறித்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரத்தினராசா சிமித்கட்சன் அவர்கள் இழப்பு ஈடு செய்ய முடியாதது-ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி-(படம்) Reviewed by Author on December 26, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.