நட்சத்திர வீரர்கள் மெஸ்சி-ரொனால்டோவை ஓரங்கட்டி உயரிய விருதை கைப்பற்றிய குரோஷிய வீரர்!
பிரான்ஸ் நாட்டின் கால்பந்து பத்திரிகை சார்பில் ஆண்டுதோறும் பலோன் டி’ஆர் என்றும் விருது கால்பந்து வீரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இது கால்பந்து விளையாட்டின் மிக உயரிய விருதாக பார்க்கப்படுகிறது.
இந்த விருதை கடந்த 10 ஆண்டுகளாக, நட்சத்திர வீரர்களான மெஸ்சி மற்றும் ரொனால்டோ ஆகியோர் மாறி மாறி பெற்று வந்தனர். இவர்களைத் தவிர வேறு எந்த வீரரும் இந்த விருதினை நெருங்க முடியாத நிலை இருந்தது.
இந்நிலையில், இந்த ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற உலகக் கிண்ண தொடரில் குரோஷிய அணி அரையிறுதி வரை முன்னேறியது. அந்த அணியின் கேப்டனும், மிட்பீல்டருமான லூகா மோட்ரிச் சிறப்பாக செயல்பட்டார்.
அத்துடன் இந்த ஆண்டு நடைபெற்ற கிளப் போட்டிகளிலும் மோட்ரிச் சிறப்பாக விளையாடியதால், அவரது புள்ளிகள் உயர்ந்தது. இதன்மூலம் சிறந்த பத்து வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்தார் மோட்ரிச்.
இதன் காரணமாக, பலோன் டி’ஆர் விருதினை மோட்ரிச் தட்டிச் சென்றார். இதன்மூலம், கடந்த 2008ஆம் ஆண்டிலிருந்து கோலோச்சிக்கொண்டிருந்த மெஸ்சி-ரொனால்டோவின் சாதனைக்கு முற்றிப்புள்ளி வைத்துள்ளார்.
முன்னதாக, பிபாவின் சிறந்த வீரருக்கான விருதையும் லூகா மோட்ரிச் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

நட்சத்திர வீரர்கள் மெஸ்சி-ரொனால்டோவை ஓரங்கட்டி உயரிய விருதை கைப்பற்றிய குரோஷிய வீரர்!
Reviewed by Author
on
December 04, 2018
Rating:
No comments:
Post a Comment