30 நிமிடம் தொடர்ந்து ஹெட்போன் பயன்படுத்தினால் இவ்வளவு பாதிப்பு ஏற்படுமா?
ஹெட்போனை தொடர்ந்து பயன்படுத்தினால் ஏற்படும் பாதிப்புகள்
- செல்போனை நேரடியாகப் பயன்படுத்துவதால் அதில் இருந்து வரும் கதிர்வீச்சுகள் மூளையைப் பாதிக்கும். ஆனால் ஹெட்போனை தொடர்ந்து பயன்படுத்தினால் அது வேறு சில பிரச்சினைகளுக்கு நம்மை கொண்டு சென்றுவிடும்.
- எந்நேரமும் ஹெட் போனில் பாட்டு கேட்டுக்கொண்டே இருப்பவர்களுக்கு கேட்கும் திறனில் குறைபாடு ஏற்படும். இதனால் உங்களின் சேவி திறன் முழுவதும் பாதிப்பு அடையும்.
- அதிகமாக ஹெட்போன் பயன்படுத்துபவர்களுக்கு சென்ஸரி நியூரல் லாஸ் எனப்படும் பாதிப்பு ஏற்படும். இதனால் காதுக்குள் இரைச்சல் கேட்கும். மேலும் தலைவலி, தூக்கமின்மை, ஒவ்வாமை போன்ற கூடுதல் உபாதைகளும் ஏற்படும்.
- தொடர்ச்சியாக ஹெட்போன் பயன்படுத்தும்போது.காதில் இருந்து வெளிவரும் அழுக்கானது காதுகளின் உட்பகுதியிலேயே தங்க ஆரம்பிக்கும். இது நாளடைவில் அவர்களுக்கு அரிப்பை ஏற்படுத்தும்.
- அதிக இசை அதிர்வினால் செவி மடலும் பாதிப்படைந்து காரணமே இல்லாமல் காது வலி வரும். இதனால் வயதானவர்கள் பயன்படுத்தும் காது நன்றாக கேட்பதற்கான மெஷின்களை இளம் வயதிலேயே பயன்படுத்த நேரிடும்.
- அதிகமாக ஹெட்போன் பயன்படுத்தினால் மன ரீதியாக பல பாதிப்புகள் ஏற்படுவதாக மனநல ஆலோசகர்கள் கூறுகிறார்கள்.
- தொடர்ந்து ஹெட்போன் கேட்பதால் சிந்திக்கும் திறன், ஞாபக சக்தி குறையும். ஹெட்போனுக்கு அடிமையானவர்களுக்கு ஆடிட்டரி ஹாலுசினேஷன் என்ற மனநோய் வரும்.
- ஹெட்போனை தொடர்ந்து பயன்படுத்தினால் அது வேறு சில பிரச்சினைகளுக்கு நம்மை கொண்டு சென்றுவிடும். தொடர்ந்து ஹெட்போன் கேட்பதால் சிந்திக்கும் திறன், ஞாபக சக்தி குறையும்.
குறிப்பு
- மன அழுத்தத்துக்கு ஹெட்போன் மூலம் இசையை கேட்பது தற்காலிக தீர்வு மட்டும் தான். ஒரு புத்துணர்வுக்காக மட்டும் தான் இதை பயன்படுத்த வேண்டுமே தவிர இதற்கு அடிமையாவது கூடுதல் பிரச்சினையையே தரும்.
- தனிமையிலிருந்து தப்பிக்க சுற்றி உள்ளவர்களிடம் பழகுங்கள். பிரச்சினைகளை மற்றவர்களிடம் மனம் திறந்து சொல்லுங்கள் மனபாரம் குறையும் என்கிறார்கள் மனநல ஆலோசகர்கள்.
30 நிமிடம் தொடர்ந்து ஹெட்போன் பயன்படுத்தினால் இவ்வளவு பாதிப்பு ஏற்படுமா?
Reviewed by Author
on
December 04, 2018
Rating:

No comments:
Post a Comment