பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார்: வைரமுத்து உள்ளிட்ட பலர் அஞ்சலி -
73 வயதான பிரபஞ்சன் புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று புதுச்சேரியில் காலமானார்.
சாரங்கபாணி வைத்தியலிங்கம் என்ற தனது பெயரை பிரபஞ்சன் என மாற்றிக் கொண்டார். புதுச்சேரியில் 1945-ம் ஆண்டு பிறந்த பிரபஞ்சன், பத்திரிக்கைகள் மூலம் தனது எழுத்துப்பணியை தொடங்கினார்.
கரந்தை கல்லூரியில் படித்து தமிழ் வித்வானம் பட்டம் பெற்றவர் பிரபஞ்சன். தமிழில் வெளிவரும் அனைத்து முன்னணி பத்திரிக்கைகளிலும் பிரபஞ்சன் எழுதியுள்ளார்.
அவருடைய எழுத்துக்கள் ஜேர்மன், பிரெஞ்ச், ஸ்வீடிஷ், ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
அவருக்கு கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பிரபலங்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர். எழுத்தாளர் பிரபஞ்சனின் மறைவு குறித்து பேசிய வைரமுத்து,
முறைப்படி தமிழ் படித்த புலவர் பிரபஞ்சன் என புகழாரம் சூட்டியுள்ளார். பிரபஞ்சனின் நாவல்களில் பெண்ணியம் சற்று தூக்கலாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சமரசம் இல்லாத ஒரு படைப்பாளி பிரபஞ்சன் என்றும் வைரமுத்து புகழாரம் சூட்டியுள்ளார்.
வானம் வசப்படும், மகாநதி உள்பட 9 நாவல்களை எழுதியுள்ளார் பிரபஞ்சன். ஏராளமான சிறுகதைகள், நாடகங்களை எழுதியுள்ளார் .
பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார்: வைரமுத்து உள்ளிட்ட பலர் அஞ்சலி -
Reviewed by Author
on
December 22, 2018
Rating:

No comments:
Post a Comment