உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி வரலாறு படைத்த பிவி சிந்து! -
சீனாவின் குவாங்ஜு நகரில் உலக டூர் ஃபைனல்ஸ் பேட்மிண்டன் போட்டி நடந்தது. மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்துவும், ஜப்பானின் நஜோமி ஒகுஹாராவும் மோதினர்.
ஆட்டம் தொடங்கியதில் இருந்தே இவர்கள் இருவரின் ஆட்டத்திலும் அனல் பறந்தது. எனினும் சிந்துவின் கை ஓங்கியே இருந்தது.
இதனால் முதல் செட்டில் சிந்து 3 முறை நஜோமியை பிரேக் செய்தார். இதன்மூலம் 21-17 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
இந்த வெற்றியின் மூலம், உலக டூர் பைனல்ஸ் பேட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை பி.வி.சிந்து படைத்துள்ளார்.
இதற்கு முன் ஒலிம்பிக் போட்டியிலும், ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியிலும் சிந்து சிறப்பாக விளையாடி வெள்ளிப்பதக்கம் வென்றிருந்தார்.
ஆனால், தற்போது தான் முதன் முறையாக தங்கத்தை வென்றுள்ளார். மேலும், கடந்த ஆண்டு நஜோமியிடம் அடைந்த தோல்விக்கு பழிதீர்த்துக் கொண்டார்.
இந்நிலையில் வெற்றி குறித்து சிந்து கூறுகையில், ‘நான் ஒரு வெற்றியாளர். இறுதிப்போட்டியில் நான் வெற்றி பெறுவேன் என்று யாரும் கூறவில்லை என்றாலும், நான் தங்கத்தை வென்றுள்ளேன். இந்த வெற்றி எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்’ என தெரிவித்துள்ளார்.

உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி வரலாறு படைத்த பிவி சிந்து! -
Reviewed by Author
on
December 17, 2018
Rating:
No comments:
Post a Comment