சம்பந்தனுக்கு மகிந்த தரப்பு விடுத்துள்ள முக்கிய கோரிக்கை! -
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைமைப் பொறுப்பை வகிக்கும் தமிழ்த் தேசிக் கூட்டமைப்பினர் அரசமைக்க ஆதரவளிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
இந்நிலையில், கூட்டமைப்பு ஆட்சி அமைக்க ஆதரவு வழங்குவார்களாக இருந்தால் அவர்கள் எதிர்க்கட்சிப் பொறுப்புக்களில் இருந்து நீங்கிக்கொள்ளவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“நாடாளுமன்றத்தில் எதிர் கட்சித் தலைமைப் பொறுப்பை வகிக்கும் சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரளிப்பதாக ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
உலகில் எந்த நாட்டிலும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிப் பொறுப்பை வகிக்கும் கட்சி ஆட்சி அமைக்க ஆதரவளிப்பதில்லை.
எவ்வாறாயினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த காலங்களில் எதிர்க்கட்சியில் இருந்தாலும் ஆளுங்கட்சியின் தீர்மானங்களை ஆதரித்தே வந்துள்ளது” என அவர் மேலும் கூறியுள்ளார்.
சம்பந்தனுக்கு மகிந்த தரப்பு விடுத்துள்ள முக்கிய கோரிக்கை! -
Reviewed by Author
on
December 05, 2018
Rating:

No comments:
Post a Comment