இலங்கை வரலாற்றில் இதுவே முதன்முறை! -
இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக பிரதமர் இல்லாத அமைச்சரவை இல்லாத அரசாங்கம் ஒன்று தற்போது நாட்டில் செயற்பட்டு வருகின்றது என தேசிய ஐக்கிய முன்னணியில் தலைவர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“தற்போது நாட்டில் ரணிலும், மகிந்தவுமே பிரச்சினையாக இருக்கின்றனர். அவர்கள் இருவரும் நல்ல மனிதர்கள் கிடையாது. ஆட்சிக்கு வந்தவுடன் ரணில் மத்திய வங்கியில் கொள்ளையிட்டார்.
அதன் பின்னரான காலப்பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்கள் கொள்ளையிட்டனர். அதில் மலிக் சமரவிக்ரமவே முதன்மையானவர்.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியையும் மலிக் சமரவிக்ரமவே சீரழித்தார் என அசாத் சாலி மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கை வரலாற்றில் இதுவே முதன்முறை! -
Reviewed by Author
on
December 05, 2018
Rating:

No comments:
Post a Comment