அண்மைய செய்திகள்

recent
-

வெளிநாட்டில் வசிக்கும் பிரித்தானியா மக்கள் எத்தனை சதவீதம் பேர்? வெளியான தகவல் -


தற்போது இருக்கும் உலகில் குடும்ப சூழ்நிலை காரணமாக சிலர் சொந்த நாடுகளை விட்டு, வெளிநாடுகளில் தங்கி சம்பாதித்து வருகின்றனர்.
அதன் பின் நாளைடைவில் அந்த நாட்டிற்கு தங்கள் குடும்பத்தினரையும் அழைத்துச் சென்று அங்கேயே வாழ்ந்துவிடுகின்றனர்.

இந்நிலையில் பிரபல ஆங்கில பத்திரிகை, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவை விட்டு வெளியேறு வேறு நாடுகளுக்கு சென்று வசித்து வரும் மக்களின் எண்ணிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில், பிரித்தானியா குடிமக்கள் 7.6 சதவீதம் பேர் வெளிநாடுகளில் வசித்து வருவதாகவும், அயர்லாந்தைச் சேர்ந்தவர்கள் 18.8 சதவீதம் பேர் என்றும், உக்ரைனைச் சேர்ந்தவர்கள் 13 சதவீதம் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும் போர்த்துகல் நாட்டைச் சேர்ந்த குடிமக்கள் 22 சதவீதம், சுவீடனைச் சேர்ந்தவர்கள் 3.4 சதவீதம், லித்துவேனியாவை சேர்ந்தவர்கள் 18.9 சதவீதம் என தெரிவித்துள்ளது.

குறிப்பாக அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த குடிமக்கள் வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்தாலும், அவர்கள் அதிகளவில் இங்கிலாந்திற்கு குடிபெயர்ந்துள்ளதாகவும், அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் ஜேர்மனிக்கு அதிகம் குடிபெயர்ந்துள்ளதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

வெளிநாட்டில் வசிக்கும் பிரித்தானியா மக்கள் எத்தனை சதவீதம் பேர்? வெளியான தகவல் - Reviewed by Author on December 22, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.