பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்! -
க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியாகியிருந்த நிலையில், பல்கலைக்கழகங்கள் மானிய ஆணைக்குழு முக்கிய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
இதன்படி, பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ளும் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படும் என்று அந்த ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மொஹான் சில்வா தெரிவித்துள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர், “இதற்கான கையேடுகள் தற்போது அச்சிடப்பட்டுள்ளன. எதிர்வரும் தினங்களில் இவற்றை மாணவர்கள் பெற்றுக் கொள்ள முடியும்.
இந்தக் கையேட்டை சரியான முறையில் விளங்கிக் கொண்டு தாம் விண்ணப்பிக்கக் கூடிய ஆகக்கூடிய கற்கை நெறிக்காக விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பது முக்கியமானது.
சில மாணவர்கள் இரண்டு நெறிக்கு அல்லது 3 கற்கை நெறிகளுக்கு மாத்திரம் விண்ணப்பிக்கின்றனர். இதனால் மாணவர்களுக்கு பொருத்தமான கற்கை நெறி இல்லாமல் போகின்றது.
ஆரம்பத்திலேயே சரியான கோரிக்கையை முன்வைக்காமையால் பின்னர் அந்த கற்கை நெறிக்கு விண்ணப்பிப்பதற்கு மாணவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்க முடியாது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இதேவேளை, 2019ஆம் ஆண்டுக்காக பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவுள்ளதுடன், சில புதிய கற்கைநெறிகளும் அறிமுகப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்! -
Reviewed by Author
on
December 31, 2018
Rating:

No comments:
Post a Comment