கடமைகளை பொறுப்பேற்ற போது விஜயகலா எடுத்துள்ள சபதம் -
அத்துடன், சட்டத்தின் ஊடாகவே தேசிய பாதுகாப்பு மற்றும் தனிமனித பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படுகின்றது எனவும் அவர் கூறியுள்ளார்.
கல்வி இராஜாங்க அமைச்சின் கடமைகளை இன்று பொறுப்பேற்றுக்கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இன்று ஐக்கிய தேசிய கட்சி எவரது துணையுமின்றி தனித்து ஆட்சியமைத்துள்ளது. இந்நிலையில் நாட்டுக்கு தேவையான பல விடயங்களை நிறைவேற்றிக் கொள்ள முடியும். இடைப்பட்ட காலத்தில் தமிழ் பாடசாலைகளில் காணப்படுகின்ற ஆசிரியப் பற்றாக்குறை, தொண்டர் நியமண ஆசிரியர்கள் எதிர் கொள்கின்ற நியமன பிரச்சினைகளுக்கு கல்வி அமைச்சருடன் கலந்தாலோசித்து தீர்வை பெற்றுக் கொடுப்பேன்.
முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் இ.ராதாகிருஸ்ணன் மலையகத்தில் பல்கலைக்கழகம் ஒன்றை உருவாக்க முயற்சிகளை மேற்கொண்டார். தற்போது அவரது நோக்கத்திற்கு எவ்வித தடைகளும் ஏற்படவில்லை.
நான் அவரது இலக்கினை நிறைவேற்றுவேன். மலையக மாணவர்களின் கல்வியினை முன்னேற்றும் பொறுப்பு எனக்கு காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
சட்டக் கல்வியை மாணவர்களுக்கு அடிப்படை கல்வியாக்கி பாடவிதானத்திற்குள் இணைத்துக் கொள்ள வேண்டும். சட்டத்தின் ஊடாகவே தேசிய பாதுகாப்பும், தனிமனித பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படுகின்றது.
நாடு தழுவிய ரீதியில் உள்ள தமிழ் பாடசாலைகள் சிறந்த பாடசாலையாக தெரிவு செய்யப்பட வேண்டும்.
அதற்கான சேவையை தான் முன்னெடுப்பதாகவும், கல்வி இராஜாங்க அமைச்சர் பதவி தனக்கு கிடைக்கப்பெற்றது தமிழ் மக்களுக்கு ஐக்கிய தேசிய கட்சியில் கிடைக்கப் பெற்ற பிறிதொரு கௌரவம் என குறிப்பிட்டார்.
கடமைகளை பொறுப்பேற்ற போது விஜயகலா எடுத்துள்ள சபதம் -
Reviewed by Author
on
December 28, 2018
Rating:
Reviewed by Author
on
December 28, 2018
Rating:


No comments:
Post a Comment