மன்னார் பொது வைத்தியசாலையின் சிறுநீரக இரத்த சுத்திகரிப்பு 1000தடவை வெற்றிகரமாக பூர்த்தி-(படம்)
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள சிறுநீரக இரத்த சுத்திகரிப்பு நிலையத்தினால் நோயாளர்களுக்கு மேற்கொள்ளப்பட்டு வந்த இரத்த சுத்திகரிப்பின் ஆயிரம் தடவையாக வெற்றிகரமாக இரத்த சுத்திகரிப்பு சிகிச்சை மேற்கொண்டமையை முன்னிட்டு வெற்றி நிகழ்வு இன்று புதன் கிழமை09-01-2019 காலை 10.30 மணியளவில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள சிறுநீரக இரத்த சுத்திகரிப்பு நிலையத்தில் இடம் பெற்றது.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் சிறுநீரக இரத்த சுத்திகரிப்பு நிலையத்தில் பொறுப்பதிகாரி வைத்தியர் வைத்தியர் ஏ.அன்ரன் சிசில் தலைமையில் இடம் பெற்றது.
-இதன் போது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் கில்றோய் பீரிஸ் மற்றும் குறித்த நிலையத்தின் பணியாளர்கள் இணைந்து கேக் வெட்டி மகிழ்வுடன் கொண்டடினார்.
இது வரை குறித்த நிலையத்தினுடாக 20 பேர்கள் இரத்த சுற்றிகரிப்பு மாற்று சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளனர்.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட சிறுநீரக இரத்த சுத்திகரிப்பு நிலையம் கடந்த வருடம் மார்ச் மாதம் 22 ஆம் திகதி வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
-மன்னார் மாவட்டத்தில் உள்ள சிறுநீரக நோயாளர்கள் இந்த தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்கு யாழ்ப்பாணம் மற்றும் அனுராதபுரம் வைத்தியசாலைகளுக்கு செல்ல வேண்டி இருந்ததுடன், இதனால் நோயாளர்கள் பெரும் இன்னல்களுக்கு முகம் கொடுத்து வந்தனர்.
இந்நிலையில், நோயாளர்களின் நலனைக் கருத்திற் கொண்டு சிறுநீரக இரத்த சுத்திகரிப்பு நிலையம் மன்னாரில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இங்கு நாளொன்றுக்கு நான்கு சிறுநீரக நோயாளர்களுக்கு இரத்த சுத்திகரிப்பு செய்யும் வகையில் வசதிகள் செய்துக் கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Reviewed by Author
on
January 09, 2019
Rating:

No comments:
Post a Comment