2019 ஆம் ஆண்டில் உலக பணக்காரர் பில்கேட்ஸ் என்ன செய்யப்போகிறார் தெரியுமா?
2018-ன் நினைவுகளோடு 2019-ஐ வரவேற்கும் வகையில் தனது ப்ளாக் பக்கத்தில் உலகப் பணக்காரரும் மைக்ரோசாஃப்ட் நிறுவனருமான பில் கேட்ஸ் ஒரு கட்டுரையை எழுதியுள்ளார் .
அதில், என்னுடைய 20-ம் வயதுகளில் எனக்குள் எழுந்த கேள்விகளுக்கும் தற்போது 63 வயதில் எனக்குள் எழும் கேள்விகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. அன்றிலிருந்து இன்று வரை எனது பணியின் தரத்தை நான் ஆய்வு செய்வதைத் தொடர்ந்து வருகிறேன்.
ஆனால், என்னுடைய குடும்பத்துக்கான நேரத்தை நான் அளித்து வருகிறேனா? புதிய விஷயங்களைக் கற்று வருகிறேனா? பழைய நண்பர்களோடு இணக்கத்தையும் புதிய நண்பர்களோடு உறவையும் வளர்த்துக் கொள்கிறேனா?
இந்தக் கேள்விகளை எல்லாம் இன்று தான் யோசிக்கிறேன். என்னுடைய 25-வது வயதில் இந்தக் கேள்விகள் எல்லாம் எனக்கு சிரிப்பை வரவழைத்திருக்கும். வாரன் பஃவெட் சொன்னது போல் நான் விரும்பு எல்லோரும் என்னை விரும்புகிறார்களா? எனத் தெரிந்து கொள்வது சிறந்த அளவீடாக இருக்கும் என நினைக்கிறேன்.
2019-ல் இரண்டு துறைகளில் டெக்னாலஜியால் ஏற்படக்கூடிய நன்மைகள் குறித்து கற்றுக்கொள்ளப் போகிறேன். முதலாவது, ’தனியுரிமை மற்றும் கண்டுபிடிப்புகள்’.
புதிய தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளால் தனி மனிதனின் தனியுரிமையைக் காப்பது. இரண்டாது, கல்வித் தளத்தில் தொழில்நுட்பம். இந்த இரு விஷயங்களையும் கற்றுக்கொள்ளப் போகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
2019 ஆம் ஆண்டில் உலக பணக்காரர் பில்கேட்ஸ் என்ன செய்யப்போகிறார் தெரியுமா?
Reviewed by Author
on
January 01, 2019
Rating:

No comments:
Post a Comment