40 வயதில் 44 குழந்தைகள் பெற்ற பெண்- 18 ஆண்டுகள் கர்ப்ப கால வாழ்க்கை -
உகாண்டா நாட்டின் முகோனோ மாவட்டத்தை சேர்ந்த மரியம் என்ற பெண் 44 குழந்தை பெற்றுள்ளார்.
இவரது 13வது வயதில் முதல் இரட்டை குழந்தைகள் பெற்றுள்ளார். தொடர்ந்து. தொடர்ந்து 6 முறை இரட்டை குழந்தைகளையும், 4 முறை மூன்று குழந்தைகளும், 3 முறை நான்கு குழந்தைகளும் பிறந்துள்ளன. மேலும் 8 முறை ஒரு குழந்தை வீதம் பிறந்துள்ளது.

மரியம் மொத்தமாக தனது வாழ்நாளில் 18 ஆண்டு காலம் கர்ப்பம் தரித்த நிலையிலேயே வாழ்ந்துள்ளார்.
மரியமின் 44 குழந்தைகளில் தற்போது 38 குழந்தைகள் மட்டுமே உள்ளன. எனினும் இது குறித்து மரியம் கூறியதாவது, எனக்கு இதுவரை 44 குழந்தைகள் பிறந்துள்ளது.
எனது கணவர் குடித்துவிட்டு வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே இங்கு வருவார். அவருக்கு வேறு பல மனைவிகள் உள்ளனர்.
என்னுடைய ஆறுதல் என் குழந்தைகள்தான். எனவேதான் நான் விருப்பப்பட்டு குழந்தை பெற்று கொண்டேன். என் அப்பாவிற்கும் பல்வேறு மனைவிகள் மூலம் 45 குழந்தைகள் உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
40 வயதில் 44 குழந்தைகள் பெற்ற பெண்- 18 ஆண்டுகள் கர்ப்ப கால வாழ்க்கை -
Reviewed by Author
on
January 09, 2019
Rating:
No comments:
Post a Comment