மத்திய வங்கியிடமிருந்து 9000 கோடியைப் பெற்றுள்ளோம்! மங்கள விளக்கம் -
இந்த ஆண்டுக்கான அரச செலவீனங்கல் மற்றும் நிதி தேவைக்காக அரச திறைசேரிக்கு இலங்கை மத்திய வங்கியில் இருந்து 9000 கோடி ரூபா பெறப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இந்தாண்டுக்கான செலவீனங்கள் மற்றும் பொருளாதார நிலைப்பாடு தொடர்பாக பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் பேசிய அவர்,
இந்த ஆண்டுக்காக திறைசேரிக்கு கிடைக்க வேண்டிய சர்வதேச நிதி உரிய நேரத்தில் கிடைக்காத நிலையில் இந்த ஆண்டுக்கான அரச செலவீனங்கள் மற்றும் நிதி தேவைக்காக மத்திய வங்கியிடம் இருந்து நிதியை பெறவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான அரச செலவீனங்கல் மற்றும் நிதி தேவைக்காக அரச திறைசேரிக்கு இலங்கை மத்திய வங்கியில் இருந்து 9000 கோடி ரூபா பெறப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
கடந்த கால அரசியல் நெருக்கடிகள் காரணமாக இலங்கைக்கு கிடைக்க வேண்டிய பெருந்தொகையான நிதி கிடைக்காது போய்விட்டது. கடந்த ஆண்டு இறுதியில் வரவு செலவு திட்டத்தையும் தயாரிக்க முடியாது போய்விட்டது. ஆகவே இந்த ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடு பாரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் விளக்கியுள்ளார்.
மத்திய வங்கியிடமிருந்து 9000 கோடியைப் பெற்றுள்ளோம்! மங்கள விளக்கம் -
Reviewed by Author
on
January 18, 2019
Rating:

No comments:
Post a Comment