அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் சமூகத்துக்கு கத்தோலிக்க மற்றும் மெடிஸ்த இருஅவைகளும் இணைந்து செயலாற்ற வேண்டும்-குருமுதல்வர் விக்ரர் சோசை அடிகளார்.

மன்னாரை பொறுத்தமட்டில் இரு பிரதான திருஅவைகளாக காணப்படுகின்ற கத்தோலிக்க திருஅவையும், மெதடிஸ்த திருஅவையும். இந்த திருஅவைகள் நாம் இணைவது குறைவாக இருந்தாலும்  சமூகத்திலே நாம் இணைந்து சமூகத்தின்மட்டில்  இணைந்து மேலும் செயலாற்ற வேண்டும் என மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி அ.விக்ரர் சோசை அடிகளார் இவ்வாறு தெரிவித்தார்.

உலக கிறிஸ்தவ ஒன்றிப்பு வாரத்தை முன்னிட்டு மன்னார் முருங்கன் கிறிஸ்தவ திருச்சபைகளின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கடந்த வெள்ளிக் கிழமை (25.01.2019) நறுவலிக்குளம் மாதிரிக் கிராமத்தில் அமைந்துள்ள மெதடிஸ்த ஆலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்பணி அ.விக்ரர் சோசை அடிகளார் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்

முதற்கண் இலங்கை மெதடிஸ்த திருஅவைக்கு மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகையின் நல் வாழ்த்துக்களை தெரிவித்து நிற்கின்றேன்.

கத்தோலிக்க திருஅவையினதும் மெதடிஸ்த திருச்சபையின் ஒன்றிப்பு வாரத்தை நாம் இன்று நடாத்திக் கொண்டிருக்கின்றோம். கிறிஸ்துவின் ஒன்றிப்பு எமது பலருக்கு புதிதாக இருக்கலாம். ஆனால்
கத்தோலிக்க திருஅவையும் மெதடிஸ்த மற்றும் ஏனைய பிரதான கிறிஸ்தவ சபைகளும் இதில் முனைப்பாக ஈடுபட்டு வருவது பாராட்டுக்குறியது.

உண்மையில் திருஅவைகள் இணைந்து எதை சாதிக்க வேண்டும் என்பதுதான் இன்றைய கேள்வியாகும். திருஅவைகளுக்கிடையே வேறுபாடுகள் உண்டு. திருஅவைகள் கற்பிப்பது வித்தியாசம். ஆனால் எம்மில் ஒருமைபாடும் இருக்கின்றது இல்லாமல் இல்லை. எனவே கிறிஸ்தவ ஒன்றிப்புதான் எம்மிடம் மென்மேலும் வலியுறுத்தி நிற்கின்றது.

கத்தோலிக்க இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கம் திருஅவையிலே
மறுமலர்ச்சியைக் கொண்டு வந்த இவ் சங்கம்  கிறிஸ்தவ சபைகளோடு கத்தோலிக்க திருஅவை ஒன்றிப்பை நிறைவேற்ற வேண்டும் என்பதிலே மிகவும் முனைப்பாக நின்றது.

இந்த திருச்சங்கம் பல காரியங்களைப் பற்றிச் சொன்னது. கத்தோலிக்க
திருஅவையும் திருச்சபையின் திருஅவையும் எவ்விதமாக இணைந்து செயல்படலாம் என்பதிலே இறையில் ரீதியாக கடவுளைப்பற்றிய காரியங்களிலே இணைப்பை எற்படுத்தலாம் என்றது.

இரண்டாவதாக சமூக பல்வேறுபட்ட நிலையிலே சமூகத்துக்கு இணைந்து செயலாற்றலாம் என்றது. ஆனால் சற்றுமேல் சென்று இரண்டாம் வத்திக்கான் சங்கம் இன்னொரு காரியத்தையும் சொன்னது.

எது உண்மையான கிறிஸ்தவ ஒன்றிப்பு என்றால் இரண்டாம் வத்திக்கான் சங்கம் சொல்லும் எல்லா சபைகளும் எல்லாத் திருஅவைகளும் கிறிஸ்துவை நோக்கி பயணம் செய்வதுதான் உண்மையான கிறிஸ்தவ ஒன்றிப்பு என்று திருச்சங்கம் சொல்லுகின்றது.

நம் எல்லோருக்கும் வேறுபாடுகள் உண்டு. ஆனால் பொதுவான விடயம். பொதுவான ஒரு உண்மை கிறிஸ்துவே. அதிலேதான் எல்லாத் திருஅவைகளும் சங்கமம் ஆகின்றன.

நாம் எல்லோரும் ஒரே கிறிஸ்துவை பறைசாற்றுகின்றோம். கிறிஸ்துவை அன்றி அவரை ஆதாயமாக்கியலை அன்றி எமக்கு எதுவும் இணையாக வரப்போவதில்லை. அது எமக்கு தேவையற்றதாகவே இருக்கும்.

திருஅவைகள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து கிறிஸ்துவை நோக்கி பயணம் செய்வதிலே எது எம்மை காக்க வல்லது என்றால் ரோமருக்கு எழுதிய கடிதம் மூன்றாம்அதிகாரம் இருபத்திரண்டாம் வசனம் இவ்வாறு கூறுகின்றது.

'இயேசுகிறிஸ்துவின் மீது கொண்டுள்ள நம்பிக்கையினூடாக கடவுள் மனிதரை தமக்கு ஏற்புடையவராக்குகின்றார். நம்மிக்கை கொள்வோர். அனைவரையுமே அவர்ஏற்புடையவராக்குகின்றாh';.

அவர் வேறுபாடு காட்டுவதில்லை. யார்தான் இயேசுகிறிஸ்துவை
விசுவாசிக்கின்றார்களோ யார் யார்தான் கிறிஸ்துவை உண்மையான கடவுள் எனவிசுவாசிக்கின்றார்களோ, கடவுளின் திருமகன் என ஏற்றுக்கொள்ளுகின்றார்களோ அவர்களுக்கு வாழ்வு உண்டு. வாழ்வு நிறைவாக உண்டு.

கிறிஸ்தவ ஒன்றிப்பு நம்மிடமிருந்து கேட்பது வேதாகம் சொல்லுகின்றது
'இயேசுகிறிஸ்து கொண்டிருந்த மனநிலையே உங்களிடமும் இருக்கட்டும்'. இதுதான்கிறிஸ்தவ ஒன்றிப்புக்கு அடித்தளமாக இருக்கின்றது.

இயேசுகிறிஸ்து கொண்டிருந்த மனநிலை தந்தையோடு இணைந்த மனநிலை. அது எல்லோருக்கும் பணியாற்றுகின்ற மனநிலை. தந்தையின் சித்தத்தை
நிறைவேற்றுகின்ற மனநிலை. இவைகள்தான் கிறிஸ்து கொண்டிருந்த மனநிலை.

இந்த மனநிலைதான் கிறிஸ்தவ சபைகளுக்கிடையே கிறிஸ்தவ உறுப்பினர்களுக்கிடையே ஏற்பட வேண்டிய பெரிய காரியம். இயேசுகிறிஸ்து கொண்டுள்ள மனநிலையே உங்களிடமும் இருக்கட்டும்.

இதிலிருந்துதான் பிறப்பது பணி. கிறிஸ்துவின் மனநிலையிலிருந்துதான்
திருஅவையின் பணி தொடங்குகின்றது. அதனால்தான் எசாய தனது நூல் ஏட்டிலே சொல்லவார் 52 ஆம் அதிகாரத்தில் 07ம் வசனத்திலே 'நற்செய்தியை அறிவிக்கவும் நல்வாழ்வை பலப்படுத்தவும் நலன் தரும் செய்தியை உரைக்கவும் உன் கடவுள் அரசாளுகின்றார் என்று கூறவும் வருவோரின் பாதங்கள் மலைகளின்மேல் எத்துணை அழகாக இருக்கின்றன' என்று.

அங்கேதான் திருஅவைகளின் உண்மையான தன்மையை கண்டு கொள்ளுகின்றார்கள். இங்கே இயேசுகிறிஸ்து கொண்டுள்ள மனநிலையில் நாம் ஒன்றாக இணைகின்றபொழுது அதுதான் எத்துணை அழகாக இருக்கின்றன.

திருஅவைகள் எல்லாம் ஒன்று சேர்ந்து அந்த மனநிலையை கண்டு
கொள்ளுகின்றபொழுது அதைநோக்கி பயணம் செய்கின்றபொழுதுதான் நாம் அனைவரும்இறைவனுக்குரியவர்களாக இருக்கின்றோம்.

தெசோனியருக்கு எழுதிய முதலாவது கடிதம்  3ம் அதிகாரம் 12ம் வசனம் 'உங்கள் மீது நாங்கள் கொண்ட அன்பு வளர்ந்து பெருகுவதுபோல் நீங்கள் ஒருவர் ஒருவருக்காகவும் எல்லோருக்காகவும் கொண்ட அன்பையும் ஆண்டவர் வளர்த்து பெருகச் செய்வாராக'

கிறிஸ்துவின் மனநிலையில் நாம் வாழுகின்றபொழுது ஒருவர் ஒருவரை தாங்கிக் கொள்ளுகின்ற ஒருவர் ஒருவருக்காக பணியாற்றுகின்ற ஒருவர் ஒருவருக்கு அன்பு செலுத்துகின்ற வாழ்வு பிறக்கின்றது. அதுதான் கிறிஸ்தவ ஒன்றிப்பு நிகழ்வாக இருக்கின்றது.

மன்னாரை பொறுத்தமட்டில் இரு பிரதான திருஅவைகள் இருக்கின்றன. அவைகள் கத்தோலிக்க திருஅவையும், மெதடிஸ்த திருஅவையும். இந்த திருஅவைகள் நாம் இணைவது குறைவு.

ஆனால் சமூகத்திலே நாம் இணைந்து செயலாற்றுவது மிக அதிகமாக இருக்கின்றன. குடும்ப வாழ்விலும் சமூக வாழ்விலும் பலவிதமான காரியங்களை இணைந்து செயலாற்றுகின்றோம். இது மேலும் வளர்க்கப்பட வேண்டும். திருஅவைகள் நாங்கள் எமது மாவட்டத்திலே தற்போது கிறிஸ்துவுக்கு அதிகமான சான்று பகிரப்பட வேண்டிய தேவை உணரப்படுகின்றது.

சமகாலத்திலே பல்வேறு நிகழ்வுகள் மட்டிலே நாம் திருஅவையினர் கிறிஸ்துவை எப்படி பிரதிப்பலிக்கலாம் கிறிஸ்துவின் மனநிலையை எப்படி ஏற்படுத்தலாம்கிறிஸ்துவை இன்னும் எப்படி மேலும் ஆதாயமாக்கிக் கொள்ளலலாம் இதுதான் நமக்கு இறைவன் தரும் அசீர் இதுதான் இறைவன் நமக்கு தரும் அருள்கொடை.

கிறிஸ்தவ ஒன்றிப்பு இவ் வாரத்திலே திருஅவைகளாக இணைந்திருக்கும் நாம் கிறிஸ்துவின் மனநிலையைக் கொண்டு கிறிஸ்துவுக்கு புகழ் சேர்க்க கடவுளுக்கு புகழ் சேர்க்கின்ற நல் மனதை வேண்டி நாம் இறைவனிடம் வேண்டுவோம் என இவ்வாறு தெரிவித்தார்.


மன்னார் சமூகத்துக்கு கத்தோலிக்க மற்றும் மெடிஸ்த இருஅவைகளும் இணைந்து செயலாற்ற வேண்டும்-குருமுதல்வர் விக்ரர் சோசை அடிகளார். Reviewed by Author on January 30, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.