மன்னார் மாவட்ட செயலகத்தின் நடைபெற்ற நிகழ்வு....
மன்னார் மாவட்ட செயலகத்தின் வருடாந்த ஒன்று கூடல் நிகழ்வு கடந்த08-01-2019 செவ்வாய்க்கிழமை மாலை மாவட்டசெயலக திறந்தவெளி அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.
மன்னார் மாவட்ட செயலக ஊழியர்நலன்புரி சங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இந்த ஒன்று கூடல் நிகழ்வுக்கு மாவட்ட அரசாங்க அதிபர் திரு. சி.ஏ.மோகன்றாஸ் தலைமைவகித்தார்.
இதில் மாவட்டசெயலக உத்தியோகத்தர்கள் அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் பிரதேச செயலகங்களின் பதவிநிலை உத்தியோகத்தர்கள் மாவட்டத்தில் உள்ள சகல திணைக்களங்களின் தலைவர்கள் இராணுவ பொலிஸ் உயர்அதிகாரிகள் வங்கிகளின் முகாமையாளர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.
இந்த நிகழ்வினை ஆரம்பித்து வைத்த மாவட்ட அரசாங்க அதிபர் திரு. சி.ஏ.மோகன்றாஸ் உரையாற்றும் போது
கடந்த வருடம் முழுவதும் இடைவிடாது செய்த வேலைப்பளு காரணமாக ஓய்வுகள் எடுக்கவோ கலைநிகழ்வுகளில் பங்குபற்றவோ எவருக்கும் நேரம் இருந்ததில்லை
வருட இறுதியில் நிதி நடவடிக்கைகளை முடிவுறுத்துதல் மற்றும் அபிவிருத்தி வேலைகளை முடிவிற்குகொண்டுவருதல் உள்ளிட்ட பணிகள் நிமிர்த்தம் சகல அலுவலர்களும் மன அழுத்தம் மிக்க சூழலை எதிர்கொண்டிருந்தார்கள் இத்தகைய நிலையில் ஒன்றுகூடலை
நடாத்தவோ கலை நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் மனநிலையோ அலுவலர்களுக்கு இருக்கவில்லை. இதனை
கருத்தில்கொண்டே புதுவருடத்தில் உத்வேகத்துடன் வேலைகளை ஆரம்பிக்கும் முகமாகவும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் ஒன்றுகூடவைத்து அலுவலர்களிடையே மேலும் புரிந்துணர்வை அதிகரிக்கும் வகையிலும் புதிய சிந்தனைகளை உருவாக்கும் பொருட்டும் அவர்களிடையே மறைந்திருக்கும்
கலைத்துவ ஆற்றலை வெளிக்கொண்டு வரும் வகையில் இந்த ஒன்றுகூடல் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது' என அவர் தனது உரையில் தெரிவித்தார்.
இதன் போது தேர்தல்கள் ஆணைக்குழுவினால் கடந்த வருடம் மன்னார் மற்றும் மடு கல்வி வலய மாணவர்களிடையே நடாத்தப்பட்ட ஓவியப்போட்டிகளில் வலயமட்டத்தில் முதல் மூன்று இடங்களைப்பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பெறுமதியான
பணப்பரிசுகளும் அண்மையில் வெளியான க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் துறை ரீதியாக மாவட்ட மட்டத்தில் முதல் மூன்று இடங்களைப்பெற்ற மன்னார் மற்றும் மடு கல்வி வலயங்களைச் சேர்ந்த 21 மாணவ மாணவிகள் பதக்கம் அணிவிக்கப்பட்டு பரிசில் வழங்கி அரசாங்க அதிபர் உள்ளிட்ட அலுவலர்களினால் கௌரவிக்கப்பட்டனர்.
இதன்போது அலுவலர்களினால் பாடல்கள் நடனங்கள் கலை நிகழ்வுகளும் நடாத்தப்பட்டது.மன்னார் மாவட்ட செயலகத்தின் முதல் தடவையாக அனைத்து ஊழியர்களையும் இணைத்து இந்த ஒன்று கூடல் நிகழ்வு நடத்தப்பட்டதாகவும் அலுவலர்கள் தெரிவித்தனர்
இதில்மன்னார் மாவட்ட உதவிதேர்தல்கள் ஆணையாளர் எஸ்.ஜெனிற்றனும் கலந்து கொண்டிருந்தார்.

மன்னார் மாவட்ட செயலகத்தின் நடைபெற்ற நிகழ்வு....
Reviewed by Author
on
January 11, 2019
Rating:

No comments:
Post a Comment