இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் மூள்வது தற்கொலைக்கு சமம்:பாகிஸ்தான் பிரதமர்!
துருக்கிய செய்தி ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த பாகிஸ்தான் நாட்டின் பிரதமரும், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான், இந்திய உடனான அமைதி பேச்சு வார்த்தை பற்றிய தன்னுடைய விருப்பத்தை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் பேசும்போது, "இரு அணு ஆயுத நாடுகள் போரைப் பற்றி சிந்திக்கக்கூடாது; ஏன் குளிர் யுத்தம் கூட நடத்தக்கூடாது. ஏனென்றால் இது எந்த நேரத்திலும் மோசமாகிவிடும்.

பேச்சு வார்த்தையில் ஈடுபடுவது மட்டுமே இரு நாடுகளுக்கும் உள்ள ஒரே வழி. அப்படி இல்லாமல் போரில் ஈடுபடுவது தற்கொலைக்கு சமமான செயல் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பேச்சு வார்த்தைக்கு இந்தியா ஒரு அடி எடுத்து வைத்தால், நாங்கள் இரண்டு அடி எடுத்து வைக்க தயார். ஆனால் இந்தியா பேச்சு வார்த்தைக்கான எந்த முயற்சிகளையும் மேற்கொள்ள மறுக்கிறது என குற்றம் சுமத்தினார்.
மேலும், காஷ்மீரின் உரிமைகளை ஒருபோதும் ஒடுக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் மூள்வது தற்கொலைக்கு சமம்:பாகிஸ்தான் பிரதமர்!
Reviewed by Author
on
January 09, 2019
Rating:
No comments:
Post a Comment