மன்.கணேசபுரம் ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணம்,தைத்த சீருடை வழங்கல் நிகழ்வு-
புலம்பெயர் மக்களின் நிதி உதவியுடன் புளூஸ் அபிவிருத்தி அமைப்பினால் மன்/கணேசபுரம் ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கு இவ்வருடத்திற்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் தைத்த பாடசாலை சீருடை என்பன வழங்கி வைக்கப்பட்டன.
இந் நிகழ்வானது பாடசாலையில் இன்று (09.01.2019) பாடசாலையின் அதிபர் திருமதி. கவிதா தலைமையில் நடைபெற்றது. பிரதம விருந்தினராக மாந்தை மேற்குப் பிரதேச உதவி செயலாளர் திரு ஜெசிந்தன் கலந்துகொண்டார். சிறப்பு விருந்தினர்களாக மாந்தை மேற்கு பிரதேச சபை உறுப்பினர் விஜயபாண்டி, மாந்தை மேற்கு சிறுவர் நன்நடத்தை உத்தியோகஸ்தர் திரு அமல்ராஜ், புளூஸ் அபிவிருத்தி அமைப்பைச் சேர்ந்த ஜெயப்பிரதாபன், தென்றல்மாறன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இவ் புளூஸ் அபிவிருத்தி அமைப்பு இலங்கையில் பதிவு செய்யப்பட்ட ஒரு அமைப்பாகும். இவற்றுக்கான நிதி உதவிகளை கனடாவில் இயங்கும் டொறொண்டோ புளூஸ் அபிவிருத்தி அமைப்பினூடாக புலம்பெயர் மக்களினால் வழங்கப்பட்டு வருகின்றது.
இவ் அமைப்பு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்குப் பகுதிகளில் தமது சேவையினை துரிதமாக செய்யு வருகின்றது. மாணவர்களுக்கான கல்வி வசதிகளை மேம்படுத்தல் அவற்றுக்கான நிதி மற்றும் கற்றல் உபகரணங்கள் உதவிகளை வழங்குதல் பாடசாலைகளுக்கான அடிப்படைத் தேவைகளை இனங்கண்டு அவற்றை நிவர்த்தி செய்வதற்கான வழிசமைத்தல். அத்தோடு வறிய குடும்பங்களின் மேம்பாட்டுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கல் என்பனவற்றை முதன்மையாக செய்து வருகின்றது.
இவ் அமைப்பு மன்னாரில் மன்/கணேசபுரம் ஆரம்ப பாடசாலையினையும் முல்லைத்தீவில் முல்/கேப்பாப்பிலவு அ.த.க. பாடசாலையினையும் தமது பொறுப்பிலெடுத்து பாடசாலைக்கான சில வளப்பற்றாக்குறைகளையும் மாணவர்கள் கற்றலுக்கான தேவைகளையும் வழங்கி வருகின்றபர்கள். நேற்றய தினம் முல்லைத்தீவு கேப்பாப்பிலவு பாடசாலைக்கு இவ்வாறான கற்றல் உபகரணம் மற்றும் தைத்த சீருடைகள் என்பன வழங்கப்பட்டது. அதுமட்டுமன்றி யாழ்ப்பாணம் பொலிகண்டி பகுதியில் வறிய 42 மாணவர்களுக்கும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விஸ்வமடு மேற்கு நெத்தலியாறு பகுதியிலுள்ள 375 மாணவர்களுக்கும் அவர்களின் கல்வி தரத்திற்குத் தேவையான அனைத்து கற்றல் உபகரணங்கள் வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஏனைய மாவட்டத்திலும் பின்தங்கிய பாடசாலைகளைப் பொறுப்பெடுத்து இவ்வாறான செயற்பாடுகளைச் செய்திட உள்ளதாகவும் அறியப்படுகின்றது.

Reviewed by Author
on
January 10, 2019
Rating:

No comments:
Post a Comment