அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பிரதேச சபை-மாதாந்த குப்பை வரி அறவிட நடவடிக்கை-

மன்னார் பிரதேச சபை எல்லைக்குள் உள்ள வீடு ஒன்றுக்கு மாதாந்தம் குப்பை
வரியாக ஐம்பது ரூபா அறவிடுவதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இவைகள் மக்களுக்கு தெரியப்படுத்திய பின் நடைமுறைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் பிரதேச சபை எல்லைக்குள் வரும் வாகனங்களுக்கான  வரிகள் அறவீடும் சம்பந்தமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டு அவை இவ்வருடம் முதல்
நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக
தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வருட இறுதியில் (2018) மன்னார் பிரதேச சபையின் மாதாந்தக் கூட்டம்
இதன் தலைவர் எஸ்.எச்.எம்.முஜாஹீர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைய மன்னார் பிரதேச சபை எல்லைக்குள் வரும் வாகனங்களின் பெரிய வாகனங்களுக்கு
ஒரு நாளுக்கு ரூபா 100 உம் சிறிய வாகனங்களுக்கு ரூபா 50உம் நெல் ஏற்றும்
பெரிய வாகனத்துக்கு ஒரு மாதத்துக்கு ரூபா 3000 என தீர்மானம்
நிறைவேற்றப்பட்டுள்ளது.

அத்துடன் ஒரு மாதத்துக்கு ஒரு வீட்டிற்கு ரூபா 50 குப்பை வரியாக
அறவிடுவதெனவும் மன்னார் பிரதேச சபைக்குட்பட்ட எல்லாக் கிராமங்களுக்கும் இது தொடர்பான ஒலிபெருக்கி மூலம் தெரிவிப்பது எனவும் தீர்மானம் எடுக்கப்பட்டு இதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்களிடம் குப்பை வரிகளை அறவிடுவதற்கான நடவடிக்கைகளை எடுக்கின்ற
இதேவேளையில் சனி ஞாயிறு தவிர்ந்த ஏனைய நாட்களில் திண்மக் கழிவுகளை அகற்றுவதற்கான நடவடிக்கையாக ஆளணிகளை அதிகரிக்க வேண்டும் என தவிசாளர் எஸ்.எச்.எம்.முஜாஹீர் தெரிவித்தார்.

அத்துடன் இறைச்சிக் கோழி விற்கப்படும் ஒரு வீட்டிற்கு ஒரு வருடத்துக்கு
10,000 ரூபா அறவிடுவதென இவ் சபையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவைகள் இவ் வருடம் முதல் அமுலுக்கு வரும் வகையில் நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் பிரதேச சபை-மாதாந்த குப்பை வரி அறவிட நடவடிக்கை- Reviewed by Author on January 10, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.