செல்போனில் பேசிக்கொண்டே கிணற்றில் விழுந்த பெண் -
"செல்போனில் பேசிக்கொண்டே கிணற்றில் விழுந்த பெண் - காப்பாற்றச் சென்றவர்களும் தத்தளித்த பரிதாபம்","articleSection": "tamil-nadu","articleBody": "ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே செல்போனில் பேசிக்கொண்டே தவறுதலாக கிணற்றில் விழுந்த பெண் மற்றும் காப்பாற்றச் சென்ற இருவர் வெளியேற முடியாமல் தண்ணீரில் தத்தளித்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே உள்ள சின்ன பிடாரியூரை சேர்ந்தவர் சங்கீதா,அங்குள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.
கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து, மகனுடன் வாழ்ந்து வரும் சங்கீதா, நேற்று மாலைதன்னுடைய வீட்டை ஒட்டியுள்ள கிணறு அருகே நின்றுகொண்டு சங்கீதா செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென நிலை தடுமாறிய அவர் செல்போனோடு கிணற்றில் விழுந்து விட்டார்.
இதைப்பார்த்த அந்த பகுதியை சேர்ந்த சுப்பிரமணி, கதிரேசன் ஆகியோர் சங்கீதாவை காப்பாற்ற கிணற்றில் குதித்தனர். கிணற்றில் படிகள் ஏதும் இல்லாததால் 3 பேரும் மேலே வர முடியாமல் தண்ணீரில் தத்தளித்தனர். அனைவருக்குமே லேசான காயமும் ஏற்பட்டு இருந்தது.
கிணற்றில் 3 பேர் தத்தளிப்பதை அறிந்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இதுபற்றி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதனை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வீரர்கள், கிணற்றுக்குள் தவித்த 3 பேரையும் கயிறுகட்டி பத்திரமாக மீட்டு மேலே கொண்டுவந்தார்கள். பின்னர், அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
செல்போனில் பேசிக்கொண்டே கிணற்றில் விழுந்த பெண் -
Reviewed by Author
on
January 10, 2019
Rating:

No comments:
Post a Comment