மன்னார் மாவட்டத்தில் எங்கு தோண்டினாலும் மனித எலும்புக் கூடுகளே வெளிவருகின்றன- சார்ள்ஸ் நிர்மலநாதன்MP (படம்,ஒலிப்பதிவு)
மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித புதை குழி தற்போது மூடி மறைக்கப்பட்ட விடையமாக காணப்படுகின்றது.
எனினும் மன்னார் நகர்ப் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட மனித புதைகுழியில் தற்போது கூட அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றது.
குறித்த மனித புதை குழியின் உண்மைகள் வெளிவர வேண்டும் என தமிழ் தேசியக்கூட்டமைபப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (8) இடம் பெற்ற இராஜ தந்திரிகள் சிறப்புரிமைகள் சட்டத்தின் கீழான கட்டளை தொடர்பிலான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குற்றஞ்சாட்டினார்.
இது குறித்து அவர் மேலும் உரையாற்றுகையில்,,,
மன்னார் மாவட்டத்தில் எங்கு தோண்டினாலும் மனித எலும்புக் கூடுகளே வெளிவருகின்றது. மன்னார் மனிதப் புதைகுழி தோண்டப் பட்டுக் கொண்டிருந்தாலும் திருக்கேதீஸ்வர மனிதப் புதைகுழி தோண்டப்படாது மூடி மறைக்கப்பட்டு விட்டது.
பயங்கர வாதத் தடைச்சட்தில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வர்களை பிணையில் விடுவிக்க வேண்டும் அல்லது புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டும். யுத்தத்தின் போது பாக்கிஸ்தான் இராணுவத்தின் மல்டி பரல்கள் கொண்டுவரப்பட்டதாக அனுர பிரியதர்சன யாப்பா எம்.பி. கூறியுள்ளார்.
எனவே பல நாடுகள் இணைந்து தான் இங்கு யுத்தத்தில் ஈடுபட்டது என்பதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார். மன்னார் மாவட்டத்தில் எங்கு தோண்டினாலும் மனித எலும்புக் கூடுகளே வெளிவருகின்றது.
மன்னார் நகர்ப் பகுதியில் தற்போது 283 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளது. அவற்றில் 21 மனித எலும்புக்கூடுகள் சிறுவர்களுடையது என அறிய முடிகின்றது. குறித்த எலும்புக்கூடுகளின் மாதிரிகளை அமேரிக்காவிற்கு அனுப்பி பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
-அதனை நான் பாராட்டுகின்றேன்.எனினும் குறித்த சம்பவம் எப்படி இடம் பெற்றுள்ளது என்பதனை சுயாதீனமாக வெளிப்படுத்த வேண்டும். மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித புதை குழி தற்போது மூடி மறைக்கப்பட்ட விடையமாக காணப்படுகின்றது.
எனினும் மன்னார் நகர்ப்பகுதியில் தற்போது கூட அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றது. அதனை என்னால் நேரடியாக அவதானிக்கக்கூடியதாக இருந்தது.அகழ்வு பணிகளை மேற்கொண்டு வருபவர்கள் மீது நான் குறை சொல்ல வில்லை.
அவர்கள் நேர்மையாக நடந்து கொள்ளுவதாக தெரிகின்றது.எதிர் காலத்தில் குறித்த நடவடிக்கைகள் மலுங்கடிக்கக்கூடாது.என அவர் மேலும் தெரிவித்தார்.

Reviewed by Author
on
January 09, 2019
Rating:

No comments:
Post a Comment