சீனாவுடன் இணைய மறுத்தால் ராணுவம் அனுப்பப்படும்!
தைவானில் தன்னாட்சி நடைபெற்று வந்தாலும், தனி நாடாக அதனை பிரகடனம் செய்யப்படவில்லை. தென் சீனக் கடல் பகுதி தங்களுடையது என்று கூறி வரும் சீனா, தற்போது தைவானையும் சொந்தம் கொண்டாடி வருகிறது.
சீனாவுடன், தைவான் இணைவது கட்டாயமானது என்றும், ஒரே நாடு இரு கொள்கையின் அடிப்படையில் அமைதியான முறையில் தைவானை இணைத்து கொள்ள தாம் விரும்புவதாகவும் சீன ஜனாதிபதி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ‘தைவான் இதற்கு சம்மதிக்காவிட்டால் படைகளை அனுப்பி வைப்பதற்கும் தயங்க மாட்டோம். தைவானை தனி நாடாக அங்கீகரித்து சுதந்திரம் வழங்கினால் மக்களின் வாழ்வாதாரம் படுமோசமான நிலைக்கு தள்ளப்படும். இதனை அந்த பகுதி மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, தைவானின் ஜனநாயகத்திற்கு மதிப்பளிக்க வேண்டும் என அந்நாட்டு ஜனாதிபதி Tsai Ing-wen தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஜின்பிங்கின் பேச்சு இருநாடுகளுக்கும் இடையில் பதற்றத்தை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

சீனாவுடன் இணைய மறுத்தால் ராணுவம் அனுப்பப்படும்!
Reviewed by Author
on
January 03, 2019
Rating:
No comments:
Post a Comment