பிரித்தானியாவில் சட்டவிரோதமாக அகதிகளை குடியேற்றிய இருவர் கைது -
பிரித்தானியாவில் சட்டவிரோதமாக அகதிகள் குடியேற உதவியதாகக சந்தேகத்தின் பேரில் 33 வயதான ஈரானிய மற்றும் 24 வயதான பிரித்தானிய நபரை மான்செஸ்டரில் கைது செய்ததாக தேசிய குற்ற முகமை நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரித்தானியாவில் சட்ட விரோதமாக நுழைய அகதிகளுக்கு உதவியதாக, இரண்டு பேரை தேசிய குற்ற முகமை நிறுவனம் இன்று இரவு கைது செய்துள்ளது.
விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால், அவர்களை பற்றிய தகவல்களை தற்போது தெரிவிக்க முடியவில்லை.
நவம்பர் மாதம் வரை 239 அகதிகள் குறுக்கு வழிகளின் மூலமாக பிரித்தானியாவில் குடியேறியுள்ளனர். மேலும், கிறிஸ்துமஸ் விழாவின் இடையே பிரான்சில் இருந்து இங்கிலாந்திற்கு வர முயற்சித்தவர்களில் குறைந்தபட்சம் 139 அகதிகளை பிடித்துள்ளோம் என அதில் கூறப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் சட்டவிரோதமாக அகதிகளை குடியேற்றிய இருவர் கைது -
Reviewed by Author
on
January 03, 2019
Rating:

No comments:
Post a Comment