போருக்கு தயாராக இருங்கள்! சீன இராணுவத்திற்கு ஜி ஜின்பிங் உத்தரவு -
சுதந்திர நாடு என்று பிரகடனப்படுத்திக் கொண்ட தைவானை சீனா தொடர்ந்து சொந்தம் கொண்டாடி வருகிறது. தைவான் சீன ஆளுகைக்கு உள்பட்ட ஒரு பகுதியே என்று சமீபத்தில் அந்நாட்டு ஜனாதிபதி ஜி ஜின்பிங் பேசியிருந்தார்.
அத்துடன், தைவானை மீண்டும் சீனா உடன் இணைக்க முயற்சிகளை அவர் மேற்கொண்டு வந்தார். எனினும், சீனாவின் இந்த நகர்வுகளுக்கு எதிராக அமெரிக்கா களமிறங்கியது.
தைவானின் பாதுாப்புக்கு ஒத்துழைக்கும் வகையிலான ஒப்பந்தந்தத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் கையெழுத்திட்டார். இதனால், சீனா ஜனாதிபதி கடும் கோபமடைந்தார்.
இந்நிலையில், சீனாவின் மத்திய இராணுவ கமிஷன் கூட்டத்தில் பங்கேற்று பேசிய அவர் இராணுவத்தை போருக்கு தயாராக இருக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர், “மிக வேகமாக நவீனமாகி வரும் சீன இராணுவம், போருக்கும், எத்தகைய நெருக்கடியையும் எதிர்கொள்ளும் வகையில் தயார் நிலையில் இருக்கவேண்டும்.
சீன கம்யூனிஸ்ட் இடும் கட்டளைகளை உறுதிபட நிறைவேற்றவேண்டும்” என்று கூறியுள்ளார்.
சீன ஜனாதிபதியின் இந்த கருத்துக்கள் சர்வதேச நாடுகளுக்கு இடையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, தென்சீனக்கடல் விவகாரத்தில் சீனாவும் அமெரிக்காவும் மோதி வருவது குறிப்பிடத்தக்கது.
போருக்கு தயாராக இருங்கள்! சீன இராணுவத்திற்கு ஜி ஜின்பிங் உத்தரவு -
Reviewed by Author
on
January 08, 2019
Rating:

No comments:
Post a Comment