ஐசிசி-யின் இரண்டு விருதுகளை தட்டிச் சென்ற இந்திய வீராங்கனை:
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒவ்வொரு ஆண்டும் மகளிர் கிரிக்கெட்டில் சாதித்த வீராங்கனைகளுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்து வருகிறது.
அதன்படி 2018ஆம் ஆண்டில் சாதனை படைத்த வீராங்கனைகளுக்கான விருது பட்டியலை ஐ.சி.சி அறிவித்துள்ளது.
இந்தப் பட்டியலில் 2018ஆம் ஆண்டின் சிறந்த மகளிர் கிரிக்கெட் வீராங்கனை மற்றும் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனை ஆகிய இரண்டு விருதுகளை, இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா தட்டிச் சென்றுள்ளார்.
அதே போல் ஐ.சி.சி-யின் சிறந்த டி20 கிரிக்கெட் வீராங்கனை விருதிற்கு அவுஸ்திரேலிய வீராங்கனை ஆஸ்லே ஹீலி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஐசிசி-யின் இரண்டு விருதுகளை தட்டிச் சென்ற இந்திய வீராங்கனை:
Reviewed by Author
on
January 01, 2019
Rating:
No comments:
Post a Comment