சிறுநீர் பாதையில் எரிச்சலா? இதோ அற்புத தீர்வு -
அவ்வாறு ஏற்பட்டால், சிறுநீர் பாதையில் தொற்றுநோய் என்று அர்த்தம்.
சிறுநீர் பாதையில் வளர்ச்சியடையும் பக்டீரியாக்கள் விளைவாக அதனை சுற்றியுள்ள திசுக்களில் வீக்கம் ஏற்படுத்துவதன் காரணமாக, வலி மற்றும் எரிச்சல் உண்டாகிறது.
சிறுநீர் எரிசல் ஏற்படுவதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றது.
நீரிழிவு, பால்வினை நோய், சிறுநீர் பாதை தொற்றுநோய், உடலில் நீர் வறட்சி, சிறுநீரக கற்கள், கல்லீரல் பிரச்சனை, அல்சர் என்பன முக்கிய காரணங்கள் ஆகும். இதனை சிறந்த முறையில் போக்குவதற்கு நாம் வீட்டு வைத்தியங்கள் சிலவற்றை கையாளுவோம்.
- அன்னாசிபழம் மற்றும் முள்ளங்கி சம அளவு சாறு எடுத்து, இரண்டும் கலந்து பருகி வந்தால் சிறுநீர்பாதையில் ஏற்படும் எரிச்சல் நீங்கும்.
- அதிகமான அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தால், சிறுநீரானது அடர்ந்த மஞ்சள் நிறத்தில் வருவதோடு, எரிச்சலோடும இருக்கும். ஆகவே ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை 2-3 டம்ளர் தண்ணீர் குடிப்பதை பழக்கமாக கொள்ள வேண்டும். இருப்பினும் எரிச்சலுடன் இருந்தால், அது சிறுநீர் பாதையில் தொற்றுநோய் ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம்.
- சிறுநீர் பாதையினால் ஏற்படும் எரிச்சலை, இந்த சிட்ரஸ் பழத்தின் ஜூஸானது சரிசெய்யும். வேண்டுமெனில் எலுமிச்சை ஜூஸ் கூட குடிக்கலாம். ஏனெனில் சிட்ரஸ் பழ ஜூஸ்கள், பாக்டீரியாவை அழிக்கவல்லது.
- நெல்லிக்காய் ஜூஸை குடிப்பதாலும், சிறுநீர் பாதையில் ஏற்படும் எரிச்சலை குணமாக்கலாம்.
- தேங்காய் நீர் உடலில் ஏற்படும் நீர்வறட்சியை தடுக்க வல்லது. அதிலும் இவற்றை மயக்க நிலை மற்றும் நீர் வறட்சியின் போது 2-3 டம்ளர் குடித்து வந்தால், அந்த எரிச்சலானது போய்விடும். இதனால் வலியுடன் சிறுநீர் வெளியேறுவது குணமாகும்.
- ஒரு டம்ளர் தண்ணீருடன், 1 டேபிள் ஸ்பூன் மல்லித் தூளை சேர்த்து, இரவில் படுக்கும் முன் ஊற வைத்துவிட்டு, மறுநாள் காலையில், அதில் சர்க்கரை சேர்த்து குடித்தால், சரியாகிவிடும்.
- தினமும் இரண்டு அல்லது மூன்று முறை, கருப்பை வாய்க்குழாய் (vagina) மற்றும் ஆண்குறியை (penis) கழுவ வேண்டும். இதனால் பாக்டீரியாவானது தங்காமல் தடுக்கலாம். மேற்கூறியவாறெல்லாம் செய்தால், எரிச்சலுடன் கூடிய சிறுநீர் வெளியேற்றம் சரியாகிவிடும்.
சிறுநீர் பாதையில் எரிச்சலா? இதோ அற்புத தீர்வு -
Reviewed by Author
on
January 03, 2019
Rating:
Reviewed by Author
on
January 03, 2019
Rating:


No comments:
Post a Comment