நானாட்டானில் மீன் பண்ணை அனுமதி பத்திரத்தில் சட்ட விரோதமான மணல் வியாபாரம்.....
நானாட்டான் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அருவியாற்றின் அறுவைக் குன்று பகுதியில் மீன் பண்ணை அமைப்பதற்கு பிரதேச செயலரினால் அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் மண் மணல் அகழ்வு செய்து விற்பனை செய்யப்படுவதாகவும் இதனால் வீதிகள் முற்றுமுழுதாக பாதிக்கப்படுவதாகவும் பொதுமக்களிடம் இருந்து கிடைத்த முறைப்பாட்டடினை அடுத்து .
மணல் அகழ்வு செய்யப்படும் இடத்திற்கு 31-12-2018 பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் மாவட்ட அரச செயலர் சி.ஏ. மோகன்றாஸ் நானாட்டான் பிரதேச செயலாளர் மா.சிறிஸ்கந்த குமார் நானாட்டான் பிரதேச சபை தவிசாளர் பரஞ்சோதி உப தவிசாளர் புவனம் போன்றவர்கள் அதிரடியாக சென்று பார்வையிட்டதுடன் மீண்டும் இங்கிருந்து மணல் அகழ்வு செய்து வெளியில் கொண்டு செல்ல தடை உத்தரவை செய்யுமாறு சாள்ஸ் நிர்மலநாதனாலும் மாவட்ட அரச செயலாளராலும் நானாட்டான் பிரதேச செயலாளருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நானாட்டானில் மீன் பண்ணை அனுமதி பத்திரத்தில் சட்ட விரோதமான மணல் வியாபாரம்.....
Reviewed by Author
on
January 01, 2019
Rating:

No comments:
Post a Comment