பேறு காலமும் வந்து விட்டது போசாக்கு சத்துணவுப்பொதி வழங்கப்படவில்லை-கர்ப்பிணித்தாய்மார்கள் கவலை
மன்னார் மாவட்டத்தில் நடக்கின்ற பல விடையங்கள் யாருக்கும் பெரிதாக தெரிவதில்லை அப்படி தெரிந்தாலும் அதுவும் மூடி மறைக்கப்பட்டு விடுகின்றது. மன்னார் பொதுவைத்தியசாலை தொடக்கம் பாடசாலைகள் அரச திணைக்களங்கள் நிறுவனங்கள் அரச சார்பற்ற நிறுவனங்கள் தனியார் நிறுவனங்கள் பெரிய கடைகள் சிறிய கடைகள் மூதலீட்டு நிறுவனங்கள் என எதை எடுத்துக்கொண்டாலும் சரியான முறையில் செயற்படுகின்றதா,,,,,? என்றால் அது கேள்விக்குறி தான்….
பணத்திற்கும் சலுகைக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் அதிகாரிகளே..... அலுவலகர்களே..... அதைப்பெற்றுக்கொள்ளும் பேராசை கொண்ட மனிதர்களே மக்களே…..
நீங்களே உங்கள் தலைமையில் தலையில் மண்ணள்ளிக்கொட்டுகின்றீர்கள் அது உங்களுககும் உங்களைச்சார்ந்தவர்களுக்கும் அவ்வளவாக நன்மை தரப்போவதில்லை உணராமல் இன்னும்….
அப்படியான பல விடையங்கள் ஒவ்வொன்றும் இனி வெளிவரவிருக்கின்றது தகுந்த ஆதாரங்களுடன்
அப்படியான ஒரு விடையத்தில் பாதிக்கப்பட்ட விடையம் தான் இன்று உங்கள் முன்னிலையில்…
கர்ப்பிணித்தாய்மார்களுக்கு வழங்கப்படுகின்ற போசாக்கு சத்துணவுகள் இன்னும் கொடுக்கப்படவில்லை….
இலவச சத்துணவு திட்டம் என்று அறிவிப்பது மடடும் முக்கியமல்ல அத்திட்டத்தினை சரியான முறையில் வழங்கப்படவேண்டும்.
“கர்ப்பிணித்தாய்க்கு உத்தம பூஜை“ எனும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் கர்ப்பிணித்தாய்மார்களுக்கு 1மாதத்திற்கு 2000ரூபா பெறுமதியான போசாக்கு சத்துணவுப்பொதி வழங்கப்படுகின்றது. 10மாதத்திற்கும் வழங்கப்படுகின்றது.
மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு ஊடாக ஒவ்வொரு பிரதேச செயலகங்களில் பதிவு பெற்று வழங்கப்படுகின்ற 2000*10=20000ரூபா முத்திரை வழங்கப்பட்டு தெரிவு செய்யப்பட்ட கடைகளில் பெற்றுக்கொள்ளலாம்.
ஒரு கர்ப்பிணித்தாய் தன்னை பதிவு செய்தது முதல் அதாவது கரு உண்டான காலம் முதல் பெறுமாதம் வரை 10 மாதங்கள் வழங்கப்பட வேண்டும். அதுதான் ஆரோக்கியமான தாய் சேய் நலனுக்கு உகந்த செயல் ஆகும்..
ஆனால் நடப்பது கொடுமையிலும் கொடுமை என்னவென்றால் மாதமாய் இருக்கின்ற கர்ப்பிணித்தாய் பேறுகாலம் வந்து பிள்ளைகள் பெற்றுக்கொண்ட பிறகும் போசக்கு சத்துணவு பொதிகள் வழங்கப்படவில்லை பெரும் ஏமாற்றடைகின்றனர் கர்ப்பிணித்தாய்மார்கள்.
இந்த சத்துணவுப்பொதியானது மிகவும் அவசியமானதொன்று இதை நம்பியும் பல தாய்மார்கள் உள்ளனர். என்பதையும் உணருங்கள்…
உரிய நேரத்தில் உரியவர்களுக்கு வழங்கப்படாத சத்துணவுப்பொதிகள் விற்பனை செய்யப்படுகின்றது கவலைக்குரிய விடையம் தான்….
கர்ப்பிணித்தாய்மார்களின் ஆரோக்கியத்துடன் விளையாடதீர்கள்……
கடமையையாவது செய்யுங்கள் கடமைக்காக செய்யாதீர்கள்.
சம்மந்தப்பட்ட அதிகாரிகளே சற்று சிந்தியுங்கள் விரைந்து செயற்படுங்கள்
-மன்னார்விழி-

Reviewed by Author
on
January 19, 2019
Rating:

No comments:
Post a Comment