மன்னார் மடுகல்விவலையத்தின் 04 முன்பள்ளிகளுக்கு-TNV கற்றல் உபகரணங்ககள் வழங்கும் நிகழ்வு- படங்கள்
மன்னார் மாவட்டத்தின் கல்விக்கான தனது சேவையினை 03வது வருடமாக தொடர்ந்துள்ள TNV-தமிழமுது நண்பர்கள் வட்டம் அமைபினர் புதிய வருடத்தில் 17-01-2019 அன்று மடுகல்விவலையத்திற்கு உட்பட்ட 04 முன்பள்ளிகளுக்கு ஓரே நாளில் விஜத்தினை மேற்கொண்டுள்ளனர்.
முன்பள்ளிகளின் ஆசிரியர்களின் வேண்கோளுக்கு இணங்க அவர்களின் தேவைகளை கண்டறிந்து அவர்களுக்கான கல்விச்செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான கற்றல் உபகரணங்களையும் வழங்கி வைத்தனர்.
மன்-சன்னார் முன்பள்ளி-சன்னார் பள்ளமடு
மன்-முல்லை முன்பள்ளி- வட்டக்கண்டல்
மன்-அல்-பதாஷ் முன்பள்ளி-சன்னார்
மன்-அல்-பலாஹ் முன்பள்ளி- காயா நகர்-பெரியமடு
இந்த நான்கு முன்பள்ளிகளுக்கும் தேவைகள் அதிகமாக இருக்கின்றபோதும் எங்களால் முடிந்தளவிற்கு மாணவர்களின் கல்விச்செயற்பாட்டுக்கான கற்றல் உபகரணங்களையே வழங்க முடிந்தது.
தொடர்ந்ததும் இவ்வாறான கல்விச்செயற்பாட்டுக்கு உறுதுணையாக இருப்போம் அமைப்பின் இயக்குநர் வை.கஜேந்திரன் இம் முன்பள்ளி மாணவர்களுக்கான அன்பளிப்பு மற்றும் கற்றல் உபகரணங்களை அன்பளிப்பாக வழங்கியவர் திருவாளர் S. விமலேஸ்வரன் பொறியியலாளர் அவர்களுடன் தமிழமுது நண்பர்கள் வட்ட அமைப்பினரும் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வழங்கி வைத்தனர்.
ஓவ்வொருவரினதும் வாழ்வில் ஆரம்பக்கல்வியானது சரியான முறையில் கற்றுக்கொடுக்க வேண்டும் அதற்கான முயற்சிகள் அனைத்தினையும் அனைவரும் முன்வந்து செயலாற்ற வேண்டும்.
சிறுவர்களின் கல்வியால் தான் நாளை நல்ல ஒழுக்கமான சமுதாயத்தினை கட்டியெழுப்பலாம் நாளைய தலைமுறையின் தூண்களை நல்ல விளைறிலத்தில் கல்வியால் உழுவோம்...
புதிய உலகம் படைப்போம்......

மன்னார் மடுகல்விவலையத்தின் 04 முன்பள்ளிகளுக்கு-TNV கற்றல் உபகரணங்ககள் வழங்கும் நிகழ்வு- படங்கள்
Reviewed by Author
on
January 19, 2019
Rating:

No comments:
Post a Comment