மத்திய கிழக்கு நாடுகளில் தண்டனை பெற்ற இலங்கையர்கள்: குற்றங்களால் வந்த விளைவு -
போதைவஸ்து தொடர்பான குற்றங்களுக்காக மத்திய கிழக்கு நாடுகளில் பல இலங்கையர்கள் தண்டனை பெற்றுள்ளனர் என வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியக கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் சட்டவிதி முறைகளை மீறி தங்கியிருக்கும் இலங்கையர்கள் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன் போது பேசிய அவர்,
சவூதியில் மாத்திரம் 49 இலங்கையர்கள் நிர்கதி நிலைக்கு உள்ளாகியுள்ளனர். இவர்கள் அங்குள்ள பெண்கள் தடுப்பு முகாமில் உள்ளனர்.
இதில் 68 வயதான ஒரு பெண்ணும் உள்ளடங்குவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார். வெளிநாடு செல்வதற்கு வயது பார்க்கப்படுகின்றபோது இவர் எவ்வாறு அங்கு சென்றார் என்பது குறித்து கேள்வி எழுப்பப்படுவதாக அப்புஹாமி குறிப்பிட்டார்.
இதேவேளை, இது தொடர்பான முழுமைத்தகவல்களை அவர் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய கிழக்கு நாடுகளில் தண்டனை பெற்ற இலங்கையர்கள்: குற்றங்களால் வந்த விளைவு -
Reviewed by Author
on
January 20, 2019
Rating:

No comments:
Post a Comment