வயிற்றில் புழுக்கள் தொல்லையா? இதோ சில எளிய வழிகள் -
வாரம் ஒருமுறை வயிற்றுப்புழுக்களை அழித்து விட வேண்டும் இல்லையேன்றால் சில நேரங்களில் அவை பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும். அவை அடிவயிற்றில் வலி, பசியின்மை, வயிற்றுப்போக்கு, மலப்புழையில் அரிப்பு, தூக்கமின்மை, குமட்டல், எடை குறைவு போன்றவற்றை உருவாக்கிவிடும்.
அந்தவகையில் வயிற்றில் வளரும் புழுக்களை அழிக்க சில நாட்டு வைத்தியங்கள் சிலவற்றை பாரப்போம்.

- வெங்காய சாற்றினை காலையில் வெறும் வயிற்றில் சிறிது குடிக்க வேண்டும். இப்படி செய்வதால் வயிற்றில் உள்ள ஒட்டுண்ணிகள் அழித்து வெளியேறிவிடும்.
- மாதுளையின் தோலை உலர வைத்து, அரைத்து பொடி செய்து, அதில் சிறிது தேன் கலந்து உட்கொண்டு வர, வயிற்றில் உள்ள புழுக்களின் வளர்ச்சி தடுக்கப்பட்டு, அவை அழிந்து வெளியேறும்.
- தினமும் பச்சை பூண்டை 3-4 உட்கொண்டு வர வேண்டும். இப்படி செய்வதால் வயிற்றை சுத்தமாக வைத்துக் கொள்ள முடியும்.
- பாகற்காயை சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு டம்ளர் மோரில் 1 டேபிள் ஸ்பூன் பாகற்காய் சாற்றினை சேர்த்து கலந்து, அவ்வப்போது குடித்து வர, வயிற்றில் புழுக்கள் வளர்வதைத் தடுக்கலாம்.
- எலுமிச்சையின் விதைகளை அரைத்து பேஸ்ட் செய்து, 1 டம்ளர் நீரில் கலந்து, அத்துடன் சிறிது எலுமிச்சை சாற்றினையும் சேர்த்து கலந்து வாரம் ஒருமுறை குடித்து வர, குடல் புழுக்களை முற்றிலும் வெளியேற்றி, வயிற்றை சுத்தமாக வைத்துக் கொள்ளலாம்.
- 1 டேபிள் ஸ்பூன் அசிட்டிக் ரைஸ் வினிகரை 1 டம்ளர் நீரில் கலந்து, குடிப்பதன் மூலமும் வயிற்றில் வளரும் புழுக்களை அழிக்கலாம். அதிலும் இச்செயலை ஒரு நாளில் 3-4 டம்ளர் என வாரம் ஒருமுறை குடித்து வர, வயிறு சுத்தமாக புழுக்களின்றி இருக்கும்.
- தினமும் 1-2 கிராம்பை உட்கொண்டு வர, அதில் உள்ள ஆன்டி-மைக்ரோபியல் தன்மையினால், புழுக்கள் வெளியேறிவிடும். முக்கியமாக கிராம்பு வளர்ந்த ஒட்டுண்ணிகளை அழிப்பது மட்டுமின்றி, அதன் முட்டைகளையும் முற்றிலும் அழித்து வெளியேற்றிவிடும்.
வயிற்றில் புழுக்கள் தொல்லையா? இதோ சில எளிய வழிகள் -
Reviewed by Author
on
January 20, 2019
Rating:
No comments:
Post a Comment