அண்மைய செய்திகள்

recent
-

விண்வெளியில் விளம்பரப் பலகை: அசத்தல் திட்டம் அறிமுகம் -


உலக மக்கள் அனைவரும் பார்க்கும் வகையில் விளம்பரப் பலகையை நிறுவ ரஷ்ய நிறுவனம் ஒன்று எடுத்துள்ள முயற்சி பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
குறித்த முயற்சியை சாத்தியமாக்குவதற்காக இதுவரை எவரும் யோசித்திராத இடத்தை அந்த நிறுவனம் தெரிவு செய்துள்ளது.
ரஷ்யாவின் ஸ்டார் ரொக்கட் என்ற இந்த நிறுவனம் விண்வெளியைத்தான் அதற்கான இடமாகத் தெரிவு செய்துள்ளது.

ஒளி உமிழும் தன்மை கொண்ட சிறிய செயற்கை கோள்கள் இதற்காகப் பயன்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
பூமியில் இருந்து 400 முதல் 500 கிலோமீற்றர் உயரத்தில் இந்த செயற்கை கோள்கள் நிலை நிறுத்தப்பட உள்ளது.

அவற்றை ஒருங்கிணைப்பதன் மூலமாக வெவ்வேறு வடிவங்களில் எழுத்துகளையும், வடிவங்களையும் உருவாக்க முடிவு செய்துள்ளனர்.
இரவு நேரங்களில் உலகம் முழுவதுமுள்ள 7 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் இதைப் பார்க்க முடியும் என கூறும் அவர்கள்,
இதன் மூலமாக வெறும் விளம்பரங்கள் மட்டுமின்றி, மக்களுக்கான தகவல்கள், அவரச கால எச்சரிக்கைகள் ஆகியவற்றையும் காட்ட முடியும் என சுட்டிக்காட்டியுள்ளனர்.

எதிர்வரும் 2021 ஆம் ஆண்டில் இருந்து இது பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும் என அந்த நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்வெளியில் விளம்பரப் பலகை: அசத்தல் திட்டம் அறிமுகம் - Reviewed by Author on January 18, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.