மன்.மாற்றாற்றல் உடைய குழந்தைகளுடன் பொங்கல் விழா-தமிழமுது நண்பர்கள் வட்டம்(TNV)-படங்கள்
மன்னார் மாவட்டத்தில் மாற்றுத்தேவைக்கு உட்பட்ட மாணவர்கள் கல்வி பயிலும் (மாடப்)-MARDAP- மன்.மாற்றாற்றல் உள்ளோர் புனர்வாழ்வு சங்கம் நிறுவனத்தின் இயக்குநர் அருட்சகோதரி ஜோசப்பின் மேரி அவர்களின் அனுமதியுடன் மன்னார் தமிழமுது நண்பர்வட்டம்(TNV) அமைப்பினர் ஏற்பாட்டில் 2019 ஆண்டுக்கான தமிழர் நிகழ்வான பொங்கல் விழா நிகழ்வு இன்று காலை 9-30 மணியளவில் இடம் பெற்றது.
குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்டத்தில் உள்ள மாற்றுவலு உடைய 25க்கு மேற்பட்ட குழந்தைகள் அக்குழந்தைகளுக்கு கற்பிக்கும் ஆசிரியர்கள் 20 பெற்றோர்கள் தமிழமுது நண்பர்வட்ட அமைப்பினர் என பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் ஒருங்கிணைப்பாளராக செயட்பட்ட அருட்சகோதரி சாந்தினி அவர்கள் தனதுரையில்
மனிதர்களாகிய நாம் சந்தோசமாக வாழ்வதற்கா பலசெயட்பாடுகளை செய்கின்றோம் நாமே நமக்காய் பலவிதத்தில் சந்தோசமாக இருப்பதற்காக காரியமாற்றுகின்றோம் அதிலும் சிலர் பிறரின் சந்தோசத்திற்காக சில காரியங்களை செய்கின்றார்கள்.
இங்கே இருக்கின்ற ஒவ்வொரு பிள்ளைகளும் மாற்றாற்றலுடையவர்கள் இவர்களேடு பொங்கல் விழாவினை கொண்டாடுவதற்காக மன்னார் தமிழமுது நண்பர்வட்டம்(TNV) அமைப்பினர் முன்வந்து செயற்பட்ட செயலானது மனித மனங்களின் மாற்றம் ஏற்படுத்தும் செயற்பாடாகும்.
மனதிற்கு மகிழ்ச்சியாகவுள்ளது தேவையுடையவர்களை தேடி வந்து இவ்வாறான நற்காரியங்களை செயல்படுத்தும் இவ்வமைப்பினர் கடந்த வருட தைப்பொங்கலை பட்டித்தோட்டம் சந்தோம் முதியோர் இல்லத்தில் கொண்டாடியுள்ளார்கள் இவர்களின் செயற்பாடுகள் பாராட்டுக்குரியதும் வாழ்த்துக்குரியதுமாகும் என்றார்.
- வை-கஜேந்திரன்-

Reviewed by Author
on
January 16, 2019
Rating:

No comments:
Post a Comment