உடும்பு ஒன்றை கொன்று இறைச்சியாக்க முற்பட்ட நபருக்கு 20000 ரூபா அபராதம்.
காட்டில் பிடிக்கப்பட்ட உடும்பு ஒன்றை கொன்று இறைச்சியாக்க கையில்
எடுத்துச் சென்ற நபர் ஒருவருக்கு மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றில்
இருபதாயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மன்னார் பேசாலை பொலிஸ் நிலைய பிரிவுக்குள் நபர் ஒருவர் காட்டுப்
பகுதிக்குலிருந்து உடும்பு ஒன்றை பிடித்து அதை கொன்று
இறைச்சியாக்குவதற்காக பேக் ஒன்றில் மறைத்து கையில் எடுத்துச் சென்றபோது
ரோந்து சென்ற பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இவ் நபரை பேசாலை பொலிசார் கடந்த வியாழக் கிழமை (17.01.2019) மன்னார்
மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதிபதி ரி.சரவணராஐh முன்னிலையில்
ஆஐர்படுத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டபோது இவ் நபர் தனது
குற்றத்தை ஏற்றுக் கொண்டார்.
இவரின் குற்றத்துக்காக நீதிபதி குற்றவாளிக்கு இருபதாயிரம் ரூபா அபராதம்
விதித்ததுடன் பத்தாயிரம் ரூபாவை உடன் செலுத்தும்படியும் மிகுதி
பத்தாயிரம் ரூபாவை பிரிதொரு தவனையில் செலுத்தும்படியும் கட்டளை
பிறப்பித்தார்.

Reviewed by Author
on
January 20, 2019
Rating:

No comments:
Post a Comment