அண்மைய செய்திகள்

recent
-

தலைமன்னார் பியரில் கடை ஒன்று தீப்பற்றியதில் 14 லட்சம் ரூபா பொருட்கள் சேதம்-படங்கள்

தலைமன்னார் பியரில் அதிகாலையில் கடை ஒன்று தீப்பற்றியுள்ளது. அயலவர்கள் அவ் தீயை அணைக்க எடுத்த முயற்சி கைகூடாதபோதும் அருகிலுள்ள வீடுகள் பாதுகாக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

வியாழக் கிழமை (07.02.2019) அன்று தலைமன்னார் பியர் கேபிள் கவுஸ்
பகுதியில் அதிகாலை ஐந்து மணியளவில் பலசரக்கு கடை ஒன்று திடீரென எறிந்துக் கொண்டிருந்ததைக் கண்ட அயலவர்கள் அவ் தீயிலிருந்து அக் கடையை பாதுகாக்க எடுத்த முயற்சி கைகூடவில்லை.

இருந்தபோதும் அவ் கடைக்கு அயலிலுள்ள வீடுகள் எவ்வித சேதமும் இன்றி இவ் தீ பரவாமல் பாதுகாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ் கடை தீப்பற்றி எறியும்போது கடைக்குள் எவரும் இருக்கவில்லை எனவும் கடை எறிந்து கொண்டிருக்கும்போதே கடை உரிமையாளரான எம்.பாலசுப்பிரமணியத்துக்கு தெரியப்படுத்தி அவர் சற்று நேரத்துக்குள் அவ்விடம் வந்து சேர்ந்ததாக பொலிசில் தெரிவிக்கப்படுகிறது.

கட்டிடம் உட்பட பொருட்களுடன் 14 இலட்சம் ரூபா சேதம் அடைந்துள்ளதாக கடை உரிமையாளர் எம்.பாலசுப்பிரமணியம் தலைமன்னார் பொலிசில் முறையீடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சார ஒழுக்கால் இவ் விபத்து ஏற்படக்கூடிய வாய்ப்பு இ;லையென
தெரிவிக்கப்படுகின்றபோதும் இது விடயமாக தலைமன்னார் பொலிசார் தீவிர
விசாரனையில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிய வருகின்றது.
 








தலைமன்னார் பியரில் கடை ஒன்று தீப்பற்றியதில் 14 லட்சம் ரூபா பொருட்கள் சேதம்-படங்கள் Reviewed by Author on February 08, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.