உலகமே எதிர்பாத்திருக்கும் ஒரு ஆய்வு முடிவு-
மன்னார் மாவட்டம் தீவகபகுதி பெருநிலப்பகுதி என இரு பெரும் பகுதிகளை கொண்டதாகும் பெருநிலப்பகுதி பெரும்பாலும் சனத்தொகையிலும் மக்கள் விகிதாசாரத்திலும் குறைவாக காணப்பட்டது யுத்த காலப்பகுதியில் பெரும் நிலப்பரப்பில் சில பகுதிகள் விடுதலைபுலிகள் வசம் காணப்பட்டது மேலும் சில பகுதிகள் இலங்கை இராணுவ கட்டுப்பாட்டில் காணப்பட்டது இராணுவத்தினுடைய பல இராணுவ முகாம்கள் விமான ஓடுதலங்கல் மற்றும் புலனாய்வாளர்களின் பகுதிகளும் காணப்பட்டது அதற்கு நிகராக பெரும் நிலப்பரப்பில் விடுதலை புலிகளும் தங்களுடைய பாரிய இராணுவ முகாம்களை அமைத்திருந்தனர் மாவீரர் துயிலும் இல்லங்களையும் அமைத்திருந்தனர்
அதனால் பெரும் நிலப்பகுதி சார்ந்து இடம் பெற்ற அனைத்து விடயங்களிலும் யுத்த காலப்பகுதியில் இருதரப்பினரும் சார்ந்திருந்தனர்
ஆனாலும்
மன்னார் மாவட்டத்தின் தீவகப்பகுதியானது யுத்தம் தொடங்கிய காலப்பகுதியில் இருந்து முழுவதும் இராணுவத்தினர் வசமே காணப்பட்டது எனவே தீவகப்பகுதி சார்ந்து இடம் பெற்ற அனைத்து விடயங்களுமே இராணுவத்தை சார்ந்தே இடம் பெற்றிருக்க வேண்டும் என்ற நிலைப்பாடு உள்ளது
அந்த அடிப்படையில் கடந்த வருடம் மன்னார் மாவட்டத்தில் புதிய கட்டடம் ஒன்று அமைப்பதற்காக மணல் அகழ்வு செய்யப்பட்ட போது குறித்த மண்களில் சந்தேகத்திற்கு இடமான மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன எனவே குறித்த அகழ்வு இடம் பெறும் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான மேலும் சில மனித எச்சங்கள் காணப்படலாம் என்ற அடிப்படையில் மன்னார் நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவின் பெயரில் சட்டவைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ மற்றும் தொல்லியல்துறை பேராசிரியர் ராஜ் சோமதேவ் தலைமையில் குறித்த பகுதியை அகழ்வு செய்யும் பணி ஆரம்பிக்கப்பட்டது
ஆரம்ப அகழ்வு பணிகளின் போது ஆங்காங்கே சிதறிய சில மனித எச்சங்கள் மீட்கப்பட்டது ஆனாலும் தொடர்ச்சியாக அகழ்வு பணிகள் இடம் பெற்ற போது அனைவரையும் அச்சம் அடையவைக்கும் வகையில் முழு மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டது
குறித்த வளாகத்தில் இரு விதமான பகுதிகளில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டது
மத்திய பகுதி
மத்திய பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எச்சம் அதிகம் சிதைவடைந்ததாகவும் ஒழுங்கான முறையில் புதைக்கப்பட்டும் காணப்பட்டது
வளாகத்தின் ஓரப்பகுதி
வளாகத்தின் ஓரப்பகுதியில் ஆரம்பத்தில் சில மண்டையோடுகலே தெண்பட்டன ஆனாலும் தோண்ட தோண்ட அதிர்சி அளிக்கும் வகையில் கொத்து கொத்தாக மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டது குறித்த ஓரப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் சிதைவுகள் குறைவாகவும் அதே நேரத்தில் அவசர அவசரமாக புதைக்கப்பட்டதாகவும் காணப்பட்டது அதே நேரத்தில் ஒன்றுடன் ஒன்று கோர்த்த விதமாகவும் முறையற்றவிதமாக காணப்படது அதை தொடர்ந்து
மத்திய பகுதியை விடுத்து குறித்த வளாகத்தின் ஓரப்பகுதியை ஆளப்படுத்தியும் அகலப்படுத்தியும் அகழ்வுகள் இடம் பெற்றன
ஆளப்படுத்தும் போதும் அகலப்படுத்தும் போதும் தொடர்சியாக மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டன அதனை தொடர்ந்து அனைவரினது கவனமும் புதைகுழி பக்கம் திரும்பியது
விசித்திரமான விதங்களில் மனித எச்சங்கல் அடையாலம் காணப்பட்டது
• கால்கள் பிணைக்கப்பட்டவிதமாக
• கைகல் இரண்டும் விடிவிக்க முடியாமல் கட்டப்பட்டவிதமாக
• ஒன்றுக்குல் ஒன்று பொறுத்து நிற்கும் வகையில்
• தாய் குழந்தை அருகருகே
• சங்கிலியால் பிணைக்கப்பட்ட விதமாக
• வாய்கள் கொடுரமாக திறந்து
• உடைவு மற்றும் கீறல்களுடன் எலும்புகள் என
சாதரண ஒரு புதைகுழியில் இருந்து நீங்கி கொடுரமாக கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது கொல்லப்பட்டு கொட்டப்பட்டிருக்கலாம் என உறுதிப்படுத்தும் வகையில் மனித எச்சங்கள் காணப்பட்டது
அகழ்வு பணிகள் ஒரு புறம் இடம் பெறுகையில்
குறித்த புதைகுழி தொடர்பாகவும் குறித்த புதைகுழி தோண்டப்படும் பகுதி தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது
குறித்த வளாகம் முஸ்லீம் மக்களுக்கு சொந்தமான ஒரு மயானம் என கூறப்பட்டது
• மாயாணமாக இருந்தால் ஏன் கொத்து கொத்தாக மனித எச்சங்கள் ஒரே இடத்தில் புதைக்கப்பட்டிருக்கின்றன அதோ நேரத்தில் என் கால்கல் குறுக்கே பிணைக்கப்பட்ட விதமாக மனித எச்சங்கள் காணப்படுகின்றது என சந்தேகம் எழுகின்றது
மன்னாரில் பல வருடங்களுக்கு முன்னர் பரவிய ஒரு நோயினால் இறந்தவர்கள் என கூறப்பட்டது
• அவ்வாறு இறந்திறுந்தால் என் சங்கிலியால் கால்கள் பிணைக்கப்பட்டிருக்கின்றது அதே நேரத்தில் ஆடைகலோ அல்லது ஆடைகளில் வரும் பொத்தான்கலோ மீட்கப்படவில்லை எனவே இங்கே அனைவரும் நிர்வாணமாக புதைக்கப்பட்டிருக்களாம் என சந்தேகம் ஏற்படுகின்றது
விடுதலை புலிகளால் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் கூறப்பட்டது
• மன்னார் தீவக பகுதி முழுவதும் இராணுவம் மற்றும் கடற்படைவசமே இருந்தது இவ்வளவு பெரிய கொலை சம்பவம் இராணுவத்திற்கோ கடற்படைகோ தெரியாமல் இடம் பெற வாய்பில்லை
சங்கிலிய மன்னனால் மதம் மாறியவர்கள் கொல்லப்பட்டிறுக்கலாம்
போர்துகோயர் கலத்தில் அடிமைகளாக இருந்தவர்களாக இருக்கலாம்
• அவ்வாறு இருந்திருந்தால் 26 சிறுவர்களுடைய எச்சங்கள் மீட்கப்பட்டன அந்த 26 சிறுவர்களும் எவ்வாறு அடிமையாகி இருப்பார்கள் அல்லது மதம் மாறி இருப்பார்கள் எனும் சந்தேகம் எழுகின்றது
இதை விட
இந்திய இராணுவ கலப்பகுதியில் இடம் பெற்றிருக்கலாம் என்ற சந்தேகமும் இல்லாமல் இல்லை அதே நேரத்தில் ஒட்டுக்குழுக்கள் எவையும் செய்தனவா என சிலர் சந்தேகம் விடுக்கின்றனர்
அதே நேரத்தில் குறித்த மனித புதைகுழி அமைந்திருந்த பகுதியில் ஆரம்ப காலங்களில் புலனாய்வாலர்களின் விசாரணை நடைபெறும் பகுதி ஒன்றும் காணப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவலும் உள்ளது அதே நேரத்தில் யுத்த காலப்பகுதியில் இந்தியாவிற்கு சட்டவிரோதமாக தப்பி செல்ல முற்பட்ட தமிழ் குடும்பங்களுடையதாக இருக்கலாம் என கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது
எது எவ்வாறோ
தற்போது மனித எச்சங்களின் காலப்பகுதியை அறியும் ஆய்வுக்காக கடந்த மாதம் தெரிவு செய்யப்பட்ட மனித எச்சங்கள் புளோரிடா அனுப்பப்பட்டு ஆய்வு முடிவுகள் நாளையதினம் வெளிவரும் என மன்னார் மனித புதைகுழி அகழ்வு பணிகளுக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்
எனவே குறித்த முடிவு தமிழர்களுக்கு அதிர்சியை ஏற்படுத்த போகின்றதா அல்லது இலங்கையில் இடம் பெற்ற யுத்த குற்றங்களை மேலும் உறுதிப்படுத்தும் ஒரு ஆதாரமாக காணப்பட போகின்றத என்பது நாளைய முடிவில் தெரியவரும் என ஒட்டு மொத்த தமிழ் சமூகமும் காத்திருக்கின்றது.
-J.Nayan-

Reviewed by Author
on
February 08, 2019
Rating:

No comments:
Post a Comment