கடந்த பரீட்சை பெறுபேறுகளில் மன்னார் இலங்கையில் 2இடம். கல்வி வலயப் பணிப்பாளர் திரு .K.J.பிறட்லி
மன்னாரில் ஆசிரியர், பௌதீக வளங்கள் குன்றியிருக்கின்றபோதும் கடந்த
பரீட்சை பெறுபேறுகளில் மன்னார் இலங்கையில் 2இடம்.
கடந்தகால யுத்தத்தில் பாதிப்புக்குள்ளாகியிருந்த இவ் மன்னார் பிரதேசம்
அபிவிருத்தி திட்டங்கள் பிற்போடப்பட்டு அல்லது அபிவிருத்திக்கான
சந்தர்ப்பங்கள் இழக்கப்பட்டிருக்கின்றன. இருந்தும் கடந்த கல்வி பொது
தராதர உயர்தரப் பரீட்சையில் சகல பாடவிதானத்திலும் மன்னார் மாவட்டம்
இலங்கையில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது என மன்னார் கல்வி வலயப்பணிப்பாளர் திரு.K.J.பிறட்லி இவ்வாறு தெரிவித்தார்.
மன்.புதுக்குடியிருப்பு அரசினர் முஸ்லீம் கலவன் பாடசாலையின் வருடாந்த
இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி கடந்த சனிக்கிழமை (02.02.2019)
அதிபர் ஏ.சீ.பஸ்மி தலைமையில் நடைபெற்றது இவ் நிகழ்வில் மன்னார் கல்விவலயப் பணிப்பாளர் கே.பிறட்லி, முன்னால் மாகாண சபை உறுப்பினரும் அமைச்சர் றிசாட் பதியுதீன் அவர்களின் பிரத்தியேக செயலாளருமான றிப்கான் பதியுதீன், மன்னார் பிரதேச சபை உறுப்பினர்.இன்சாவ் மற்றும் புதுக்குடியிருப்பு பள்ளிவாசல் தலைவர் ஏ.சீ.ஐயூப் ஆகியோருடன் பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர். குறித்த நிகழ்வில உரையாற்றிய வலய கல்வி பணிப்பாளர்
நான் இந்த மன்னார் கல்வி வலையத்தை அண்மையில் பொறுப்பேற்றபொழுது நான் உடற்கல்வி உதவிப் பணிப்பாளரிடம் ஒரு விடயத்தை தெரிவித்திருந்தேன். அதாவது ஒரு பாடசாலையில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றபொழுது நோய்வாய்
பட்டவர்களைத் தவிர அனைத்து மாணவர்களும் எதாவது ஒரு நிகழ்வில் கட்டாயம் பங்குப்பற்ற வேண்டும் என தெரிவித்திருந்தேன்.
அத்துடன் குறிப்பிட்ட விளையாட்டு காலங்களில் மட்டுமல்ல ஆண்டு பூராகவும் இவர்கள் விளையாட்டில் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்று
தெரிவித்திருந்தேன். உண்மையில் இந்த கருத்தை உங்கள் இந்த பாடசாலை அதிபர் ஏ.சீ.பஸ்மி மிக தெளிவாக தெரிவித்திருந்தார். நான் சில நிமிடம் அதிபருடன் உரையாடியதில் இவ் பாடசாலையை எவ்வாறு நகர்த்திச் செல்ல வேண்டும் என்ற தூரநோக்குடன் இருந்து செயல்படுகின்றார் என்பது எனக்கு நன்கு புரிகின்றது.
இன்று பாடசாலைகளில் பௌதீக வளம் ஆசிரியர் வளம் மிக பற்றாக்குறையாக காணப்படுகின்றது. நான் இவ் கல்வி வலயத்தை பொறுப்பேற்றதும் ஒவ்வொரு பாடசாலைகளிலும் இவ் நிலையை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.
நான் கலந்து கொண்ட இவ்வாறான ஒரு நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் கலந்து கொண்டார்கள். அப்பொழுது நான் அவரிடம் ஒரு விடயத்தை முன்வைத்தேன்.
அதாவது கடந்தகால யுத்தத்தில் பாதிப்புக்குள்ளாகியிருந்த இவ் பிரதேசம்
அபிவிருத்தி திட்டங்கள் பிற்போடப்பட்டு அல்லது அபிவிருத்திக்கான
சந்தர்ப்பங்கள் இழக்கப்பட்டிருக்கின்றன. இவற்றை மீள்நிர்மான பொறிமுறைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபொழுதும் இலங்கை ஒரு வருமானத்துக்குரிய நாடு என அறிவிக்கப்பட்ட பின்னர் மெதுவாக உதவிகள் வழங்கி கொண்டிருந்த நிறுவனங்கள் இவ் நாட்டைவிட்டு வறுமையுள்ள நாடுகளை நோக்கி நகர்ந்து விட்டன.
இதன் காரணமாக முப்பது வருடங்களுக்கு மேலாக யுத்தத்துக்கு முகம் கொடுத்து வந்த இந்த பிரதேசம் பூரணமான அபிவிருத்திக்கு உட்படாமல் கைநழுவி விடப்பட்டுள்ளது.
ஆகவே இதற்கு இராஐhங்க அமைச்சராக இருக்கும் நீங்கள் எதாவது ஒரு பொறிமுறையை மேற்கொள்ளும்படி அவரை நான் கேட்டிருந்தேன். அதற்கு அவர் தான் பிரதமருடன் கலந்துரையாடி வட மாகாணத்துக்கான ஒரு திட்டத்தை வெகுவிரைவில் நடைமுறைப்படுத்த இருப்பதாக தெரிவித்தார்.
ஆகவே எமது இந்த பிரதேசத்திலுள்ள பாடசாலை பௌதீக வளத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றோம்.
பல உதவி வழங்கும் திட்டங்களை இவ் பிரதேசத்துக்கு மிக சிறப்பாக ஏற்படுத்த வேண்டும். உண்மையில் மத்தியதர வருமானத்துக்குரிய நாடு என
குறிப்பிட்டாலும் எமது நாட்டில் எல்லா பிரதேசங்களும் வளர்ச்சிப்
பெறவில்லை.
குறிப்பாக வடக்கு பிரதேசம், மன்னார் மாவட்டம் கல்வி வலயம் இன்னும்
பல்வேறுப்பட்ட நிலையில் பூரணப்படுத்தப்படாமல் இருக்கின்றன என நான்
அவரிடம் தெரிவித்திருந்தேன்.
ஆசிரியர் பற்றாக்குறைகளை நான் அவரிடம் குறிப்பிடுகையில் ஆரம்பப் பிரிவில் இன்னும் 87 ஆசிரியர் பற்றாக் குறைகள் காணப்படுவதாக தெரிவித்திருந்தேன்.
நகர்புற ஆசிரியர்களை இவ் பணிக்கு நகர்த்தி செயல்படுத்தலாம் என
முயற்சிக்கும்போது இவர்கள் கிராமபுறங்களுக்கு வருவதற்கு
பின்வாங்குகின்றனர்.
ஆகவே மாவட்டங்களில் ஆசிரியர்களை உருவாக்குவதற்கான
கலந்துரையாடப்பட்டுள்ளது. அதாவது கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தி அடைந்தவர்களை இவ் ஆரம்ப கல்வி கற்பிப்பதற்கான ஆசிரியர்களை நியமிப்பதற்கான ஆலோசனையும் மேற்கொள்ளப்பட்டது.
ஆகவே எமது இந்த பிரதேசத்திலுள்ள ஆசிரியர் மற்றும் பௌதீக வளத்தில் நாங்கள் மிகவும் கரிசனைக் கொண்டுள்ளோம்.
இதேநேரத்தில் எமக்கு ஆசிரியர் பௌதீக வளங்கள் பற்றாக்குறைகள்
காணப்படுகின்றபோதும் எமது மாவட்டம் மிக சிறப்பாக சாதித்துக்
கொண்டிருக்கின்ற மாவட்டம்.
அன்மையில் வெளிவந்த கல்வி பொது தராதரப் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளைப் பார்த்தால் நாங்கள் பல இடங்களில் முன்னனியில் இருக்கின்றோம்.
இவைகள் கலைத் துறையாக இருக்கலாம் விஞ்ஞானத் துறையாக இருக்கலாம் கணிதத் துறையாக இருக்கலாம் மன்னார் மாவட்டம் இலங்கையிலே இரண்டாம் இடத்தில் இருக்கின்றது.
இது ஒவ்வொரு பாடசாலைகளின் அதிபர் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பான சேவைகளே என நான் இராஜாங்க அமைச்சரிடம் எடுத்துக்கூறியுள்ளேன்.
அதுமாத்தரமல்ல மாணவர்களாகிய உங்கள் சகோதர சகோதரிகளின் கல்வியில் கொண்ட அக்கறைதான் இவ் மாவட்டத்pன் கல்வி வளர்ச்சிக்கு காரணமாகும். இவ்வாறு நீங்களும் அவர்களைப்போல் கல்வியில் அக்கறை கொண்டவர்களாக இருக்க வேண்டும் என தெரிவித்து நிற்கின்றேன்.
விளையாட்டு, கல்வி அத்துடன் ஆன்மீகம் இவை மூன்றிலும் நீங்கள்
நிலைத்திருந்து பாடசாலையில் கற்பித்தல் வேளையில் உங்கள் கவனத்தை செலுத்த வேண்டும். போட்டி பரீட்சைகள் வரும்பொழுது நீங்கள் அதற்கு முன்னுரிமை கொடுத்து உங்கள் பயிற்சிகளை மேலும் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு நீங்கள் செயல்படும்போது உங்களுக்கு பெருமை பாடசாலைக்கு பெருமை, கிராமத்துக்கு பெருமை, உங்கள் மாவட்டத்துக்கும் நாட்டுக்கும் பெருமையை தேடிக் கொள்வீர்கள் என இவ்வாறு தெரிவித்தார்.


கடந்த பரீட்சை பெறுபேறுகளில் மன்னார் இலங்கையில் 2இடம். கல்வி வலயப் பணிப்பாளர் திரு .K.J.பிறட்லி
Reviewed by Author
on
February 06, 2019
Rating:

No comments:
Post a Comment