உலக அளவில் 600,000 பேர் வேலை இழக்கும் அபாயம்: எச்சரிக்கும் ஆய்வுகள் -
ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரித்தானியா வெளியேறும் திகதி நெருங்கிவரும் நிலையில், இனி ஒப்பந்தங்கள் தொடர்பில் எவ்வித பேச்சுவார்த்தைக்கும் இடமில்லை என ஐரோப்பிய கூட்டமைப்பு உறுதிபட தெரிவித்துள்ளது.
இதனால் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளில் இருந்து பிரித்தானியாவின் இறக்குமதியானது சுமார் 25 விழுக்காடு சரிவை எதிர்கொள்ளும் என கிழக்கு ஜேர்மனியில் உள்ள IWH நிறுவனம் பகீர் கிளப்பும் ஆய்வுகளை வெளியிட்டுள்ளது.
மட்டுமின்றி ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து ஒப்பந்தங்கள் ஏதுமின்றி பிரித்தானியா வெளியேறும் நிலை ஏற்பட்டால் ஜேர்மனியில் சுமார் 103,000 வேலை வாய்ப்புகள் பறிபோகும் எனவும், பிரான்ஸில் இது 50,000 வேலை வாய்ப்புகளை கவிழ்க்கும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
சர்வதேச அளவில் அனைத்து சந்தைகளும் சார்ந்து இருப்பதால், உரிய ஒப்பந்தங்கள் ஏதுமின்றி பிரித்தானியா வெளியேறுவது என்பது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
பிரித்தானியாவுக்கு நேரடி ஏற்றுமதி தொடர்புடைய ஐரோப்பிய கூட்டமைப்பில் உள்ள 27 உறுப்பு நாடுகளில் செயல்படும் நிறுவனங்களில் மொத்தமாக சுமார் 180,000 பதவிகளுக்கு பிரெக்ஸிற் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் மற்றும் சர்வதேச அளவில் சுமார் 433,000 தொழிலாளர்கள் பிரெக்ஸிற் காரணமாக பாதிக்கப்படுவார்கள் என்பதையும் IWH நிறுவனம் தமது ஆய்வில் சுட்டிக்காட்டியுள்ளது.
உலக அளவில் 600,000 பேர் வேலை இழக்கும் அபாயம்: எச்சரிக்கும் ஆய்வுகள் -
Reviewed by Author
on
February 12, 2019
Rating:
Reviewed by Author
on
February 12, 2019
Rating:


No comments:
Post a Comment