81 ஆண்டுகளுக்கு பின் வரலாற்று சாதனை படைத்த இலங்கை வீரர்! -
சிங்களேஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்-நாண்டெஸ்கிரிப்ட்ஸ் கிரிக்கெட் கிளப் அணிகளுக்கு இடையிலான முதல்தர கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. நாண்டெஸ்கிரிப்ட்ஸ் அணிக்காக 5வது வீரராக களமிறங்கிய ஏஞ்சலோ பெரேரா முதல் இன்னிங்சில் அபாரமாக விளையாடி 203 பந்துகளில் 201 ஓட்டங்கள் குவித்தார்.
பின்னர் இரண்டாவது இன்னிங்சில் விளையாடிய அவர், 268 பந்துகளில் 231 ஓட்டங்களில் விளாசினார். இதன்மூலம், ஒரே டெஸ்டின் இரு இன்னிங்சிலும் இரட்டை சதம் விளாசியவர் என்ற 81 ஆண்டுகால சாதனையை சமன் செய்துள்ளார்.
ஏஞ்சலோ பெரேரா குவித்த 432 ஓட்டங்களில் 40 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்கள் அடங்கும். இவரது அபார ஆட்டத்தினால் ஆட்டம் டிராவில் முடிந்தது.
கடந்த 1938ஆம் ஆண்டு இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் கெண்ட் அணி வீரர் ஆர்தர் ஃபாக் இரண்டு இன்னிங்சிலும் இரட்டை சதம் விளாசியிருந்தார். அந்த சாதனையை ஏஞ்சலோ பெரேரா சமன் செய்துள்ளார்.
மேலும், முதல்தர கிரிக்கெட்டில் இரண்டு இன்னிங்சிலும் இரட்டை சதம் விளாசிய இலங்கை வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். 28 வயதான ஏஞ்சலோ பெரேரா 97 முதல்தர போட்டிகளில் 6941 ஓட்டங்கள் குவித்துள்ளார். இதில் 18 சதங்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

81 ஆண்டுகளுக்கு பின் வரலாற்று சாதனை படைத்த இலங்கை வீரர்! -
Reviewed by Author
on
February 08, 2019
Rating:

No comments:
Post a Comment