ஆவா குழு தொடர்பில் வெளியான பல அதிர்ச்சித் தகவல்கள்! தமிழர்கள் மீது முன்னெடுக்கும் மறைமுக போரா? -
யாழ்ப்பாணத்தில் செயற்படும் ஆவா குழுவின் தலைவர்களில் ஒருவர் என அடையாளப்படுத்தப்பட்ட நபர் தொடர்பில் பல அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆவா குழுவின் பிரதான நபர்களில் ஒருவர் என அருளானந்தன் என்பவரை சிங்கள ஊடகம் ஒன்று அறிமுகம் செய்திருந்தது.
அந்த நபரின் ஊடாக ஆவா குழு தொடர்பான பல்வேறு விடயங்களை தொலைகாட்சி நேர்காணல் ஊடாக வெளிப்படுத்தப்பட்டிருந்தது.
எனினும் அருளானந்தன் என்பவர் ஆவா குழுவை சேர்ந்தவர் அல்லவென புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர் முன்னணி சோஷலிசக் கட்சியின் முன்னாள் உறுப்பினர் என புலனாய்வு பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.
சமகாலத்தில் அருளானந்தனின் செயற்பாடு தொடர்பில் புலனாய்வு பிரிவின் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.
அரசியல் சூழ்ச்சி ஒன்றை ஏற்படுத்தும் வகையில் அருளானந்தன் என்ற கதாப்பாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த நபர் யாழ்ப்பாணம், சுன்னாகம் பிரதேசத்தில் பிறந்தவர் என்ற போதிலும் அவர் நீர்கொழும்பு வாழ்ந்துள்ளார் எனத் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட முன்னணி சோஷலிசக் கட்சியின் பிரச்சார செயலாளர் புபுது ஜயகொட, அருள் தங்கள் கட்சியுடன் தொடர்புப்பட்டு செயற்பட்டுள்ளதாகவும், 2015ஆம் ஆண்டின் பின்னர் அவர் அந்தக் கட்சியில் இருந்து விலகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அருள் மேற்கொண்ட நடிப்பானது ஆவா குழுவின் உண்மையான தன்மையை மூடி மறைப்பதற்கும், தமிழர்களுக்கு எதிராக மறைமுக போர் ஒன்றை மேற்கொள்ளும் நோக்கில் இவ்வாறான போலியான தகவல்கள் வெளியிடப்பட்டதாக அரசியல் கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.
இவ்வாறான நிகழ்ச்சி ஒன்றை வெளியிட்டமை தொடர்பில் குறித்த சிங்கள ஊடகத்திற்கும், அருளானந்தன் குழுவுக்கும் பல தொடர்புகள் இருப்பதாக தெரியவந்துள்ளது.
சிங்கள தொலைக்காட்சி ஒன்றுக்கு செவ்வி அளித்த அருளானந்தன் யாழ்ப்பாணத்தில் ஆவா குழு என்ற எதுவும் இல்லை. தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தமது தேவைக்காக இவ்வாறான தாக்குதல்களை மேற்கொள்வதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆவா குழு தொடர்பில் வெளியான பல அதிர்ச்சித் தகவல்கள்! தமிழர்கள் மீது முன்னெடுக்கும் மறைமுக போரா? -
Reviewed by Author
on
February 17, 2019
Rating:

No comments:
Post a Comment