படையினரின் போர் குற்றங்களை பகிரங்மாக ஏற்றுக்கொண்ட ரணில்! கூட்டமைப்பு மகிழ்ச்சி -
கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் இளைஞர் முன்னணி மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,“யுத்தத்தின் போது படையினர் போர் குற்றங்களில் ஈடுபட்டுள்ளார்கள் என்பதை நாட்டின் பிரதமர் முதன்முறையாக உத்தியோகப்பூர்வமாகவும், பகிரங்கமாகவும் ஏற்றுக்கொண்டுள்ளார்.
இதற்கு 10 ஆண்டுகள் தேவைக்கப்பட்டுள்ளன. உண்மையை ஏற்றுக்கொள்ள பிரதமருக்கு என்ன உணர்வு ஏற்பட்டுள்ளதோ தெரியவில்லை.
அவருக்கு குற்ற உணர்வு ஏற்பட்டதோ? சர்வதேச அழுத்தம் அதிகரித்துள்ளதால் உண்மையை ஒத்துக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டதோ தெரியவில்லை.
இந்நிலையில், தென்னாபிரிக்காவைபோல உண்மைக்கும் நல்லிணக்கத்திற்குமான ஆணைக்குழுவை ஏற்படுத்தி உண்மையை சொல்லலாம் என்ற யோசனையை பிரதமர் முன்வைத்துள்ளதாக” அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
படையினரின் போர் குற்றங்களை பகிரங்மாக ஏற்றுக்கொண்ட ரணில்! கூட்டமைப்பு மகிழ்ச்சி -
Reviewed by Author
on
February 17, 2019
Rating:

No comments:
Post a Comment