மன்னார் மூர்வீதியில் சந்தேகத்திற்கு இடமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கூலர் வாகனத்தில் இருந்து ஒரு தொகுதி பீடி சுற்றும் இலைகள் மீட்பு-(படம்)
மன்னார் மூர்வீதி பள்ளிவாசல் ஒன்றின் வளாகத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கூலர் வாகனத்தினுள் இருந்து ஒரு தொகுதி பீடி சுற்றும் இலைகளை மன்னார் பொலிஸார் இன்று வியாழக்கிழமை(31) காலை மீட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,
மன்னார் மூர்வீதி பள்ளிவாசல் ஒன்றின் வளாகத்தில் எவ்வித அனுமதியும் இன்றி இன்று வியாழக்கிழமை (31) காலை கூலர் ரக வாகனம் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
எனினும் குறித்த வாகனத்தை உரியவர்கள் அவ்விடத்தில் இருந்து நீண்ட நேரமாக எடுத்துச் செல்லாத நிலையில்,குறித்த மதஸ்தலத்தின் நிர்வாகம் மற்றும் அப்பகுதி மக்கள் மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கினர்.
இந்த நிலையில் உடனடியாக மன்னார் பொலிஸார் குறித்த மதஸ்தலத்திற்கு வருகை தந்து குறித்த வாகனத்தை பார்வையிட்டனர்.
-எனினும் குறித்த வாகனத்தின் உரிமையாளர் நீண்ட நேரமாகியும் அவ்விடத்திற்கு வருகை தராத நிலையில் பொலிஸார் குறித்த வாகனத்தை மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
-பின்னர் பொலிஸ் நிலையத்தில் வைத்து குறித்த கூலர் வாகனத்தின் கதவை திறந்து பொலிஸார் சோதனையிட்டனர்.
இதன் போது குறித்த வாகனத்தில் காணப்பட்ட ரெஜிபோம் பொட்டிகளில் 17 பொதிகளை கொண்ட பீடி சுற்றும் இலைகளை மீட்டனர்.மீட்கப்பட்ட குறித்த இலைகள் 479 கிலோ கிராம் நிறை கொண்டது என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பீடி சுற்றும் இலைகள் சட்ட விரோதமாக கொண்டு செல்லுவதற்காக பதுக்கி வைத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
குறித்த வாகனத்தை யாரும் உரிமை கோரவில்லை. மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,
மன்னார் மூர்வீதி பள்ளிவாசல் ஒன்றின் வளாகத்தில் எவ்வித அனுமதியும் இன்றி இன்று வியாழக்கிழமை (31) காலை கூலர் ரக வாகனம் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
எனினும் குறித்த வாகனத்தை உரியவர்கள் அவ்விடத்தில் இருந்து நீண்ட நேரமாக எடுத்துச் செல்லாத நிலையில்,குறித்த மதஸ்தலத்தின் நிர்வாகம் மற்றும் அப்பகுதி மக்கள் மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கினர்.
இந்த நிலையில் உடனடியாக மன்னார் பொலிஸார் குறித்த மதஸ்தலத்திற்கு வருகை தந்து குறித்த வாகனத்தை பார்வையிட்டனர்.
-எனினும் குறித்த வாகனத்தின் உரிமையாளர் நீண்ட நேரமாகியும் அவ்விடத்திற்கு வருகை தராத நிலையில் பொலிஸார் குறித்த வாகனத்தை மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
-பின்னர் பொலிஸ் நிலையத்தில் வைத்து குறித்த கூலர் வாகனத்தின் கதவை திறந்து பொலிஸார் சோதனையிட்டனர்.
இதன் போது குறித்த வாகனத்தில் காணப்பட்ட ரெஜிபோம் பொட்டிகளில் 17 பொதிகளை கொண்ட பீடி சுற்றும் இலைகளை மீட்டனர்.மீட்கப்பட்ட குறித்த இலைகள் 479 கிலோ கிராம் நிறை கொண்டது என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பீடி சுற்றும் இலைகள் சட்ட விரோதமாக கொண்டு செல்லுவதற்காக பதுக்கி வைத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
குறித்த வாகனத்தை யாரும் உரிமை கோரவில்லை. மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் மூர்வீதியில் சந்தேகத்திற்கு இடமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கூலர் வாகனத்தில் இருந்து ஒரு தொகுதி பீடி சுற்றும் இலைகள் மீட்பு-(படம்)
Reviewed by Author
on
February 01, 2019
Rating:
Reviewed by Author
on
February 01, 2019
Rating:

No comments:
Post a Comment