இறுதிக்கட்ட போரில் போர்க்குற்றத்தில் ஈடுபட்ட இராணுவத்தினர்! பகிரங்கமாக ஏற்றுக்கொண்டார் மஹிந்த -
இறுதிக்கட்ட போரின் போது போர்க்குற்ற நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபட்டதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபட்ட இராணுவத்தினருக்கு தண்டனை வழங்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஊடகவியலாளர்களுடன் நடைபெற்ற விசேட சந்திப்பின் போது மஹிந்த இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.
தமிழர் தாயகப் பகுதி மீது முன்னெடுக்கப்பட்ட போர் முடிவடைந்து 10 வருடங்கள் கடக்கும் நிலையில், இராணுவத்தினரின் போர்க்குற்றங்களை மஹிந்த முதன்முறையாக ஏற்றுக் கொண்டுள்ளார்.
இறுதி யுத்தத்தில் 70 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகளின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்த சமகால அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது.
இராணுவத்தினரால் போர்குற்றம் நடந்தது என்பது உண்மை தான். அதேபோன்று விடுதலைப் புலிகளாலும் போர்க்குற்றங்கள் முன்னெடுக்கப்பட்டன.
இராணுவத்தினருக்கு மாத்திரம் தண்டனை வழங்க முடியாது. விடுதலைப் புலிகளுக்கும் அவ்வாறான தண்டனை வழங்க வேண்டும் என மஹிந்த தெரிவித்துள்ளார்.
அப்போதைய ஜனாதிபதியாக செயற்பட்ட மஹிந்த, மனிதாபிமான போரினை இராணுவத்தினர் முன்னெடுத்து வருகின்றனர். எந்தவொரு பொதுமகனும் கொல்லப்படவில்லை என இதுவரை காலமும் தெரிவித்து வந்தார்.
இந்நிலையில் முதன்முறையாக இராணுவத்தினருக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதிக்கட்ட போரில் போர்க்குற்றத்தில் ஈடுபட்ட இராணுவத்தினர்! பகிரங்கமாக ஏற்றுக்கொண்டார் மஹிந்த -
Reviewed by Author
on
February 07, 2019
Rating:

No comments:
Post a Comment