தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தார் ஓ.பன்னீர்செல்வம்! முக்கிய அம்சங்கள் என்ன? -
தமிழக பட்ஜெட்டை நிதி அமைச்சரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 8-ஆவது முறையாக தாக்கல் செய்தார்.
முக்கிய அம்சங்கள்
மெட்ரோ ரயிலை சென்னை விமான நிலையத்தில் இருந்து வண்டலூர் வரை நீட்டிக்க ஆய்வு செய்யப்படும்.நகராட்சிகளில் குடிநீர் வசதிக்காக ரூ. 18,700 கோடி ஒதுக்கீடு.
சென்னையில் பன்னடுக்கு வாகன நிறுத்தம்.
சென்னை கோவை, மதுரையில் 500 மின்சார பேருந்துகள் இயக்கப்படும்
ராமேஸ்வரத்தில் அப்துல்கலாம் பெயரில் புதிய அரசுக் கல்லூரி தொடங்கப்படும்.
மத்திய அரசின் நிதி பங்களிப்பு குறைந்து வரும் போதிலும் தமிழக அரசு சொந்த நிதி ஆதாரங்களை திரட்டி வருகிறது.
டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரம் குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும்.
அரசு நிலத்தில் 5 ஆண்டுகள் வசிக்கும் குடும்பங்களுக்கு வரன்முறை படுத்தப்பட்டு வழங்கப்படும்.
மாற்று திறனாளிகளுக்கு 3000 ஸ்கூட்டர்கள் வழங்கப்படும்.
ஊரக வளர்ச்சித்துறைக்கு 18273 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
விவசாயத்துறைக்கு ரூ. 10,500 கோடி ஒதுக்கீடு.
ஏழைகளுக்கு இன்சூரன்ஸ் திட்டம்.
சூரிய ஒளி பம்ப் செட்டுகளுக்கு 90% மானியம்.
20 ஆயிரம் பசுமை வீடுகள் கட்டித்தரப்படும்.
பள்ளி செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை 33,919 ஆக குறைந்துள்ளது.
90 சதவீத மானியத்துடன், 2 ஆயிரம் சூரிய ஒளி பம்ப் செட்டுகள் வழங்கப்படம்.
கூட்டு பண்ணை திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு.
விவசாயத்துறைக்கு 10,500 கோடி ஒதுக்கீடு.
உழவர் உற்பத்தியாளர் 4 ஆயிரம் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
2698 டாஸ்மாக் கடைகள் மூடல்.
மொத்தம் 2000 மின்சார பேருந்துகள் வாங்கப்படும். சென்னை, கோவை, மதுரையில் முதற்கட்டமாக 500 மின்சார பேருந்துகள் இயக்கப்படும்.
இயற்கை வேளாண்மையை மேம்படுத்த மாவட்டங்கள் தோறும் மையங்கள்
பால்வளத்துறைக்கு 258.45 கோடி ஒதுக்கீடு
தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்தார் ஓ.பன்னீர்செல்வம்! முக்கிய அம்சங்கள் என்ன? -
Reviewed by Author
on
February 08, 2019
Rating:

No comments:
Post a Comment