சம்பந்தனுக்கும் இதுக்கும் என்ன தொடர்பு?
வட மாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தை அல்லது தாண்டிக் குளத்தில் அமைக்கப்படாமல் சிங்கள பிரதேசத்தில் அமைக்கப்பட்டதற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருக்கும் என்ன சம்பந்தம் என வடமாகாண சபையின் முன்னாள் அவைத் தலைவா் சீ.வி.கே.சிவஞானம் கேள்வி எழுப்பியுள்ளார்.
வட மாகாண சபையின் முன்னாள் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் இன்றைய தினம் தன்னுடைய வீட்டில் செய்தியாளர்கள் சந்திப்பினை ஏற்பாடு செய்திருந்தார். இச் செய்தியாளர் சந்திப்பின் போதே பேசிய அவர்,
வடக்கு மாகாணத்திற்கான பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையில் அமைக்கப்படாமல் வவுனியாவில் உள்ள சிங்கள பிரதேசத்தை அண்மித்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவா் இரா.சம்பந்தனே காரணம் என நாடாளுமன்ற உறுப்பினா் சிவசக்தி ஆனந்தன் ஊடகங்களுக்கு கருத்து கூறியிருக்கிறார்.
ஆனால் உண்மை அதுவல்ல, சிவசக்தி ஆனந்தன் அரசியல் காழ்ப்புணா்ச்சியினால் அப்பட்டமான பொய்களை கூறிக் கொண்டிருக்கின்றார். 2016ம் ஆண்டு மே மாதம் 10ம் திகதி பொருளாதார மத்திய நிலையம் தொடா்பாக ஆராயப்பட்டது.
இதன்போது பொருளாதார மத்திய நிலையத்தை தாண்டிக்குளத்தில் அமைப்பதற்கு 26 மாகாணசபை உறுப்பினா்கள் இணங்கியிருந்தனா். ஆனால் பின்னா் முன்னாள் விவசாய அமைச்சா் மற்றும் முன்னாள் முதலமைச்சா் ஆகியோர் தாண்டிக்குளம் பகுதியில் காணியை விடுவிக்க முடியாது என கூறியிருந்தனா். இதன் பின்னரான
விவாதங்களினடிப்படையில் ஓமந்தையா? தாண்டிக்குளமா? என தீா்மானிப்பதற்காக முதலமைச்சா் ஒரு வாக்கெடுப்பை மாகாணசபைக்கு வெளியே நடாத்தியிருந்தார்.
அதில் பெரும்பான்மை வாக்குகள் ஓமந்தைக்கு கிடைத்ததால் ஓமந்தையில் பொருளாதார மத்திய நிலையத்தை அமைப்பதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டிருந்தது. இடையில் ஓமந்தையா? தாண்டிக்குளமா? என இடம்பெற்ற விவாதங்களினால் குழப்பங்கள் இருந்திருந்தன. ஆனால் சிங்கள பிரதேசங்களை அண்டி பொருளாதார மத்திய நிலையத்தை அமைக்கும்படி நாங்கள் கேட்கவில்லை.
மேலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் கூட இந்த விடயத்தில் மாகாணசபை தங்களுக்குள் பேசி தீா்த்துக் கொள்ளட்டும் என கூறினாரே த விர அதில் தலையீடுகள் எதனையும் செய்யவில்லை.
இந்நிலையில் ஓமந்தையில் அமைக்கப்படவேண்டும் என தீா்மானிக்கப்பட்ட பொருளாதார மத்திய நிலையம் எவ்வாறு வவுனியாவில் சிங்கள பிரதேசத்தை அண்டி அமைக்கப்பட்டது என்பது எமக்கு தெரியாது. அது மாகாணசபைக்கு மட்டுமல்ல, கூட்டமைப்பின் தலைவா் இரா.சம்பந்தனுக்கும் கூட தெரியாது. எனவே கண்ணை மூடிக் கொண்டு அபாண்டமான பொய்களை கூறவேண்டாம் என்றார்.
சம்பந்தனுக்கும் இதுக்கும் என்ன தொடர்பு?
Reviewed by Author
on
February 16, 2019
Rating:

No comments:
Post a Comment