அண்மைய செய்திகள்

recent
-

பிள்ளையின் சமநிலை ஆளுமையை விருத்தி செய்வதற்கு விளையாட்டு அவசியமானது-கோட்ட கல்விப் பணிப்பாளர் ரி.கிறிஸ்ரிராஜா

 மாணவர்களின் சமநிலை ஆளுமையை சமப்படுத்துகின்ற ஒரு நிகழ்வாகவே
விளையாட்டுப் போட்டிகள் வருடந்தோறும்  நடைபெறுகின்றது. பெற்றோர் தங்கள்பிள்ளைகள் மட்டில் கல்வியுடன் விளையாட்டுகளிலும் கவனம் செலுத்த வெண்டும் என மன்னார் கோட்ட கல்விப் பணிப்பாளர் ரி.கிறிஸ்ரிராஜா இவ்வாறு தெரிவித்தார்.

மன்னார் கல்வி வலயத்துக்கு உட்பட்ட பேசாலை சென்.மேரிஸ் வித்தியாலய
வருடாந்த மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி வெள்ளிக் கிழமை (22.02.2019) அதிபர் எஸ்.ஆர்.பச்சேக் தலைமையில் நடைபெற்றபோது இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட மன்னார் கோட்ட கல்விப் பணிப்பாளர் ரி.கிறிஸ்ரிராஐh இங்கு தொடர்ந்து பேசுகையில்

பாடசாலைகளில் நடைபெறும் மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியானது வருடா வருடம் நடைபெறும் ஒரு நிகழ்வாக இருக்கின்றபோதும் இன்று இவ் விளையாட்டுப் போட்டியானது மிக கோலாகலமாக நடைபெறுவதையிட்டு மகிழ்ச்சி அடைகின்றோம்.

உடற்பயிச்சி அனைத்துமே பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு வருடமும் செயற்பாடு பாடத்திட்டத்தில் இவ் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுவது வழக்கமாகும். இது மாணவர்களின் சமநிலை ஆளுமையை சமப்படுத்துகின்ற ஒரு நிகழ்வாகவே இவ் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றது.

பாடசாலை நாட்களில் ஒவ்வொரு நாளும் உடற்பயிச்சி ஒழுங்கமைக்கப்பட்டு
செயற்பட்டு மகிழ்வோம் என்ற நிகழ்வின் ஊடாக இவ் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கதாகும். பிள்ளைகளின் சமநிலை ஆளுமையை வளர்த்தெடுப்பதற்காக ஆசிரியர்கள் பெற்றோர் ஆகியோர் பிள்ளைகளை வளப்படுத்தி வருவதையும் நாம் பார்க்கின்றோம்.

இந்த பாடசாலையை நோக்கும்போது விளையாட்டில் மட்டுமல்ல ஒவ்வொரு வருடமும் ஐந்தாம் ஆண்டு புலமை பரிசு பரீட்சையில் அதிக மாணவர்களை சித்தியடைய வைத்து கல்வியிலும் எமது கல்வி வலயத்துக்கும் பெருமையை பெற்றுத் தரும் பாடசாலையாக இது சிறந்து விளங்குகின்றது.

இவ் பாடசாலையில் சுமார் 600 மாணவர்கள் இங்கு கல்வி கற்கின்றபொழுதும்
இவர்கள் பெருமபாலானவர்கள் எதாவது ஒரு நிகழ்வில் பங்குப்பற்றியதை
அவதானிக்கக்கூடியதாக இருந்தது.

இவ் பாடசாலையை நோக்கும்போது மாணவர்களுடன் அதிகமான பெற்றோரும் ஒத்துழைத்து செயல்பட்டு வருவது மகிழ்ச்சிக்குரியதும் பாராட்ட வேண்டிய விடயமாகும்.

ஒரு போட்டியில் வெற்றி தோல்வி கிடைத்தாலும் தோல்வி காண்பவர்கள் சோர்ந்து விடாது வெற்றியை நோக்கிய முயற்சியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். வீரர்கள் இத்துடன் நின்றுவிடாது வலயப் போட்டிகளிலும் தங்கள் திறமைகளை காட்ட தங்கள் பயிச்சியை மேலும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இதற்கு பெற்றோர் இடையூறாக இருக்கக் கூடாது.

தற்பொழுது பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு கல்வி மட்டும் புகட்டுவதில்
மட்டும் கவனம் செலுத்துகின்றனர். விளையாட்டும் பிள்ளைகளுக்கு
இன்றிமையாதது என்பதை பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு பிள்ளையின் சமநிலை ஆளுமையை விருத்தி செய்வதற்கு விளையாட்டும் ஒரு முக்கியமானது. ஆகவே பிள்ளைகளை கல்வியோடு விளையாட்டையும் ஈடுபடுத்த வைத்து பிள்ளைகளை வழிநடத்தப்பட வேண்டும்.

தற்பொழுது தொற்று நோய்கள் தொற்றா நோய்கள் என்பன சிறுவர்களையும் விட்டுவைப்பதில்லை.  ஆகவே நோய்களிலிருந்து விடுபட உடற்பயிச்சி அதாவது விளையாட்டு முக்கியமானதாக இருக்கின்றது என்றார்.








பிள்ளையின் சமநிலை ஆளுமையை விருத்தி செய்வதற்கு விளையாட்டு அவசியமானது-கோட்ட கல்விப் பணிப்பாளர் ரி.கிறிஸ்ரிராஜா Reviewed by Author on February 26, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.