மாந்தை மேற்கில் பாடசாலை சீருடையுடன் மாணவன் தூக்கிட்டமைக்கான காரணம் வெளியானது-படம்
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை(15) தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் வெளியாகியுள்ளது.
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பாடசாலை ஒன்றில் உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் பாடசாலை சீருடையுடன் கடந்த வெள்ளிக்கிழமை (15) இரவு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலமாக மீட்கப்பட்ட மாணவன் கருங்கண்டல் ம.வி பாடசாலையில் உயர் தர வகுப்பில் கல்வி கற்கும் ஜே.நிர்மலன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த மாணவன் தற்கொலை செய்து கொண்டடைக்கான காரணம் வெளியாகியுள்ளது.குறித்த மாணவன் வழமை போல் கடந்த வெள்ளிக்கிழமை பாடசாலைக்குச் சென்றுள்ளார்.
இதன் போது குறித்த பாடசாலையின் அதிபர் அன்றைய தினம் காலை குறித்த மாணவனை அழைத்து உடனடியாக வீட்டிற்குச் சென்று உரிய முறையில் முகச் சவரம் செய்து விட்டு பாடசாலைக்கு வருமாறு தெரிவித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில்,வீட்டுக்குச் சென்ற குறித்த மாணவன் மீண்டும் வீட்டில் இருந்து பாடசாலை சீருடையுடன் வெளியில் சென்ற நிலையில் மணல் காடு பகு தியில் தூங்கில் தொங்கிய நிலையில் அன்றைய தினம் இரவே சடலமாக மீட்கப்பட்டார்.
சக மாணவர்கள் முன்னிலையில் பாடசாலை அதிபர் மாணவனை அழைத்து கூறியமையினால் மனமுடைந்து குறித்த முடிவை எடுத்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.குறித்த மாணவன் பல் துறைகளிலும் ஆற்றல் மிக்கவர் என தெரிவிக்கப்படுகின்றது.
மாந்தை மேற்கில் பாடசாலை சீருடையுடன் மாணவன் தூக்கிட்டமைக்கான காரணம் வெளியானது-படம்
Reviewed by Author
on
February 19, 2019
Rating:

No comments:
Post a Comment