உலகின் அதிக விலை உயர்ந்த பொருட்களின் பட்டியல் -
ஏசிர் தங்க மொபைல்போன்
பல்வேறு வசதிகளுடன் வெளியாகும் மொபைல் போன்களை பின்னுக்கு தள்ளியுள்ளது இந்த ஏசிர் தங்க மொபைல்போன்.இதில், இன்டெர்நெட், ஜிபிஎஸ், கமெரா, கேம்ஸ் என எதுவும் கிடையாது. ஆனால் இதன் விலை $57,400 அமெரிக்க டொலர்கள் ஆகும்.

விலை உயர்ந்த ஹேண்ட்பேக்
white Birkin என்ற ஹேண்ட்பேக் ஹாங்காங்கில் அதிக விலைக்கு ஏலம் போனது. 9.84 கேரட் மதிப்பில் 242 வைரக் கற்கள் பதிக்கப்பட்ட உலகின் விலை உயர்ந்த ஹேண்ட்பேக் ஆகும். நைட்ரஜன் கொண்டு தயாரிக்கப்பட்டிருப்பதால் நன்கு ஒளி வீசக்கூடியதாக இந்த வைரம் இருக்கும்.
$380,000 டொலருக்கு ஏலம் போனது.

மாவீரன் நெப்போலியன் முகமூடி
மாவீரன் நெப்போலியன் மரணத்துக்குப் பின்னர் அவரது முக அச்சில் உருவான முகமூடி. இதன் மதிப்பு 91ஆயிரம் அமெரிக்க டொலர்கள்.
மைக்கேல் ஜாக்சனின் தொப்பி
மறைந்த பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் தொப்பியின் மதிப்பு 5ஆயிரம் யூரோ ஆகும்.
பிரிட்டிஷ் கயானா ஸ்டாம்ப்‘
உலகின் மிகவும் பிரசித்தி பெற்ற இந்த ஸ்டாம்ப் ஏலத்தில் 20மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையில் விலை போகும் எனக் கூறப்படுகிறது.
பிங்க் வைரம்
Vivid Pink வைரம் 28 மில்லியன் அமெரிக்க டொலர்கள் விலைபோகிறது. 16.08 கேரட் மதிப்பு கொண்டது.
உலகின் அதிக விலை உயர்ந்த பொருட்களின் பட்டியல் -
Reviewed by Author
on
February 10, 2019
Rating:
No comments:
Post a Comment